ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஐக்கிய நாடுகள் தினத்தினை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி இன்று (24.10.2025) ஐக்கிய நாடுகள் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
ஐக்கிய நாடுகள் சபை 1945 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, எதிர்காலத்தில் உலகப் போர்கள் நிகழ்வதைத் தடுக்கும் நோக்குடன் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபை என்பது உலகின் மிகப் பெரிய மற்றும் மிகவும் உலகளாவிய பன்னாட்டு அமைப்பாகும். ஐக்கிய நாடுகள் சபையில் 196 உறுப்பு நாடுகள் அங்கம் வகிக்கின்றன. ஐக்கிய நாடுகள் சபையானது அடிப்படை கல்வி, பசியில்லா உலகத்தை உருவாக்குதல், போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காண மிக முக்கியமான உலகளாவிய மையமாகவும் உலகளாவிய ஒன்றுபட்ட வளர்ச்சிiயை உருவாக்குவதை அடிப்படையாக கொண்டு செயல்படுகிறது. உலக அமைதி, பாதுகாப்பு, மனித உரிமைகள் மற்றும் நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பு ஆகியவற்றை வலுப்படுத்துவதே இந்த அமைப்பின் முக்கிய நோக்கமாகும் என தெரிவித்தார்.
இவ்விழாவில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் (பொது) முகம்மது குதுரத்துல்லா, (வேளாண்மை) லோகநாதன், ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் சிந்துஜா, இணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.சாந்தகுமாரி, மாவட்ட துணைகாவல் கண்காணிப்பாளர் விவேகானந்தன், மாவட்ட வழங்கல் அலுவலர் ராம்குமார் உட்பட தொடர்புடைய துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
%20(1).jpg)
.jpeg)
.jpeg)
