ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் இன்று (15.10.2025) அரசு ஈரோடு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் முதலாம் ஆண்டு மருத்துவம் பயில சேர்ந்துள்ள மாணவ மாணவிகளுக்கு வெள்ளை அங்கி அணியும் விழாவினை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி துவக்கி வைத்தார்.
இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி அவர்கள் தெரிவித்ததாவது,
பெருந்துறை அரசு மருத்துவக்கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவ மாணவியர்களிடம் மருத்துவம் மற்றும் மருத்துவக்கல்வி குறித்து விழிப்புணர்வு குறித்து பேசும் போது நாம் வாழ்க்கையை முறையை சிறந்ததாக பயன்படுத்த வேண்டும். நம்நாடானது அதிகமாக மருத்துவர்களை உருவாகும் நாடாக விளங்குகிறது. தமிழ்நாட்டில் மருத்துவ கட்டமைப்புககள் சிறந்த முறையில் உள்ளது.
கொரோனா காலத்தில் மருத்துவர்களின் சேவை உலகமே கண்டு வியக்கும் அளவிற்கு இருந்தது மேலும் நம்முடைய சமூகத்தில் கல்விமுறையில் முதல் அனுபவம் வாசிப்புத்திறனாகும். முறையான கல்வி முறையை கற்றுக் கொள்ளவதன் மூலம் தான் அறிவு முன்னேற்றம் அடைகிறது. மாணவர்கள் பல்வேறு திறனைகளை வளர்த்துக் கொள்வதன் மூலம் சிறந்த டாக்டராக உருவாக்க முடியும் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து ஈரோடு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் முதலாம் ஆண்டு மருத்துவம் பயில சேர்ந்துள்ள மாணவ மாணவியர்கள் வெள்ளை அங்கி அணியும் உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.
அரசு ஈரோடு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை சட்ட மருத்துவ துறையின் பிரேத பரிசோதனை கூடத்திற்கு ரூ.20 லட்சம் மதிப்புள்ள குளிர்சாதன பெட்டிகளை சக்தி குழுமம் நிறுவனங்களின் தலைவர் முனைவர் ம.மாணிக்கம் அவர்கள் வழங்கினார். மேலும் ரூ.9 இலட்சம் மதிப்புள்ள குளிர்சாதன பெட்டிகளை ஒளிரும் ஈரோடு நிறுவனத்தினர் வழங்கினார்கள்.
இவ்விழாவில் அரசு ஈரோடு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முதல்வர் மரு. த. ரவிக்குமார், துணை முதல்வர் மரு. புவிதா, மருத்துவ கண்காணிப்பாளர் மரு. சண்முகசுந்தரம், துணை கண்காணிப்பாளர் செந்தில்குமார், நோய் குறியியல் துறை தலைவர் மரு.கே. எம். மோகன சௌந்தரம், பேராசிரியர்கள், பணியாளர்கள், மாணவ - மாணவிகள் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpeg)
%20(1).jpeg)
.jpeg)
.jpeg)
%20(1).jpeg)
.jpeg)
