ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலைப்பகுதியில் மலைப்பகுதி செல்லும் சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டு பெரிய பாறைகள் சரிந்து விழுந்தன. இந்நிலையில் சாலையின் நடுவே விழுந்திருந்த மிகப்பெரிய பாறையை நெடுஞ்சாலை துறையினர் மற்றும் சாலை பணியாளர்கள் உதவியுடன் ஜேசிபி இயந்திரத்தின் மூலம் அருகே உள்ள பள்ளத்தில் அப்புறப்படுத்தினர்.
இந்த நிலச்சரிவால் 3 மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கபட்டது. இன்னும் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது என்றும் வரும் காலம் மழை காலம் என்பதால் நிலச்சரிவு ஏற்படவாய்ப்புள்ளது என்றும் பொதுமக்கள் கவனமாக செல்ல வேண்டும் என்றும் நெடுஞ்சாலைத் துறையினர் மற்றும் சாலை பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
- செய்தியாளர் சிவக்குமார்
.jpg)
.jpg)
