மாண்புமிகு வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் பெய்த வடகிழக்கு பருவ மழை வெள்ளத்தால் தரைப்பாலம் பாதிப்படைந்ததை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஈரோடு மாவட்டம், பல்வேறு பகுதியில் பெய்த வடகிழக்கு பருவ மழை வெள்ளத்தால் தரைப்பாலம் பாதிப்படைந்ததை மாண்புமிகு வீட்டுவசதி. மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு. முத்துசாமி இன்று (21.10.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் அவர்கள் சத்தியமங்கலம் வட்டம், இக்கரை நெகமம் கிராமம் பகுதியில் உள்ள தரைப்பாலம் வடகிழக்கு பருவமழை வெள்ளத்தால் பாதிப்படைந்ததை நேரில் சென்று பார்வையிட்டு, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, சுற்று வட்டார பகுதி மற்றும் திம்பம் வனப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக காற்றாற்று வெள்ளம் ஏற்பட்டு, இக்கரைநெகம புதூர் - பிஞ்சமேடு சாலையில் ஓடைக்கு குறுக்கே அமைத்துள்ள தரைப்பாலம் 200 நீலத்திற்கு முற்றிலுமாக சேதமடைந்து சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் வெள்ளம் வடிந்த பிறகு சேதமடைந்த தரைப்பாலம் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டு போக்குவரத்து சீரமைக்கப்படும் எனவும் தெரிவித்தார். நிரந்தர சீரமைப்புக்காக உயர்மட்ட பாலம் அமைக்கும் பணியினை வரும் நிதியாண்டில் எடுத்துக்கொள்ள முன்மொழிவு அனுப்பப்படும் எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து கொங்கர்பாளையம் ஊராட்சியில் வடகிழக்கு பருவமழை வெள்ளத்தால் தரைமட்டப்பாலம் பாதிப்படைந்ததை நேரில் சென்று பார்வையிட்டு, வடகிழக்கு பருவ மழையினால் குண்டேரிப்பள்ளம் அணையிலிருந்து வெளியேற்றப்பட்ட அளவுக்கதிகமான வெள்ளத்தினால். பாலம் நிரம்பி போக்குவரத்து தடைபட்டு உள்ளது. தற்போது தற்காலிக ஏற்பாடாக இருபுறமும் தற்காலிக தடை மற்றும் எச்சரிக்கை பலகைகள் அமைக்கப்பட்டுள்ளது. வெள்ளம் வடிந்த பின்னர் கான்கிரீட் குழாய்கள் அமைக்கப்பட்டு பழுதடைந்த தடுப்பு சுவர்களை சரிசெய்தும் தற்காலிக சீரமைப்பு செய்யப்பட்டு போக்குவரத்து திறந்து விடப்படும் எனவும் தெரிவித்தார். சீரமைப்பு பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி, அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ. ஜி. வெங்கடாச்சலம், ஈரோடு சட்டமன்ற உறுப்பினர் வி.சி.சந்திரகுமார், கோபிசெட்டிபாளையம் சார் ஆட்சியர் சிவானந்தம் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.
.jpg)
.jpg)
.jpeg)
.jpeg)
.jpeg)
%20(1).jpeg)
