ஈரோடு மாவட்டம், தாளவாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி அவர்கள் இன்று (15.11.2025) துவக்கி வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம் 02.08.2025 அன்று துவக்கி வைக்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் இத்திட்டத்தினால் எண்ணற்ற பயனாளிகள் பயன்பெற்று வருகின்றனர். அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் 15-வது மருத்துவ முகாம் இன்று 15.11.2025 தாளவாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வருகிறது. இம்மருத்துவ முகாமில் 17 சிறப்பு மருத்துவர்கள் மற்றும் மருத்துவ அலுவலர்கள் கலந்து கொண்டு சிகிச்சை அளிக்க வருகிறார்கள், இம்முகாமில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் கண் பரிசோதனை, பல் சிகிச்சை, ரத்தப்பரிசோதனை, ECG, X-RAY பரிசோதனைகளும் கூடுதலாக பெண்களுக்கு கர்பப்பைவாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய் பரிசோதனைகளும் செய்யப்பட உள்ளது. மருத்துவர்கள் பரிசோதனை செய்து தேவையான மருந்து மாத்திரைகள் வழங்குவார்கள் மேல் சிகிச்சை தேவைப்படுவோருக்கு சிறப்பு மருத்துவர்களை கொண்டு பரிசோதனை செய்து ECHO போன்ற உயர் பரிசோதனைகளும் செய்யப்படும். உயர் சிகிச்சை தேவைப்படுவோர் பரிந்துரை செய்யப்படுவார்கள். மேலும் முதல்வரின் மருத்துவ காப்பீட்டு அட்டை மற்றும் மாற்றுதிறனாளிகளுக்கான அட்டையும் வழங்கப்பட உள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 14 மருத்துவ முகாம்கள் நடைபெற்றுள்ளது இந்த முகாம்களில் 21,259 பயனாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் உயர் சிறப்பு சிகிச்சை வழங்கப்பட்டது. 12,540 பேருக்கு ECG-ம் 15,402 பேருக்கு ஆய்வக பரிசோதனையும் 1517 பேருக்கு X-RAYம், 1070 பேருக்கு Scan-ம், 1700 பேருக்கு ECHO-ம் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை 566 பேருக்கும், மாற்றுத்திறனாளிகள் சான்றிதழ் 902 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் நடைபெற்ற மருத்துவ முகாமில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், 10 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களும், 7 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகளும், 1 மாற்றுத்திறனாளிகளுக்கு காது கேட்கும் கருவியும், 18 நபர்களுக்கு தாட்கோ திட்டத்தின் மூலமாக தமிழ்நாடு துாய்மை பணியாளர் நலவாரியத்தின் மூலம் தற்காலிகாக துாய்மை பணியாளர்களுக்கான அடையாள அட்டையும், 5 நபர்களுக்கு தொழிலாளர் நலத்துறையின் சார்பில் நல வாரிய அட்டையும், என 41 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இம்முகாமில், மாவட்ட சுகாதார அலுவலர் மரு.அருணா, மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
%20(1).jpg)
.jpeg)
.jpeg)
.jpeg)
%20(1).jpeg)
.jpeg)