Type Here to Get Search Results !

குழந்தைகள் தின விழிப்புணர்வு பேரணி, உறுதிமொழி மற்றும் கையெழுத்து இயக்கத்தினை கலெக்டர் துவக்கி வைத்தார்.


ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், நவம்பர் -14 குழந்தைகள் தின விழாவினை முன்னிட்டு குழந்தைகள் தின விழிப்புணர்வு பேரணி, உறுதிமொழி மற்றும் கையெழுத்து இயக்கத்தினை இன்று (14.11.2025) மாவட்ட ஆட்சித்தலைவர்கள் ச.கந்தசாமி அவர்கள் துவக்கி வைத்தார்,


இன்றைய தினம் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது. இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் குழந்தைகள் தின விழிப்புணர்வு பேரணியினை துவக்கி வைத்தார். இப்பேரணியானது ஒவ்வொரு குழந்தைக்கும், ஒவ்வொரு உரிமைக்கும் என்னும் கருப்பொருளுடன், குழந்தைகளுக்கான உரிமைகளை நாம் உறுதி செய்வோம், சட்டப்படி குழந்தைகளை அடிப்பது குற்றமாகும், ஒவ்வொரு குழந்தையும் நம்முடைய பொறுப்பு என்ற பல்வேறு பதாகைகளை கையில் ஏந்தியபடி மாணவயிர் பேரணியானது, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி சம்பத் நகர் வரை சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தியது.


தொடர்ந்து, குழந்தைகள் தின விழிப்புணர்வு உறுதிமொழியான

நான் பாதுகாப்பான குழந்தைப் பருவத்திற்காக தமிழ்நாடு அரசு எடுக்கும் அனைத்து விதமான குழந்தை நேய செயல்பாடுகளிலும் என்னை ஈடுபடுத்திக்கொள்வேன். குழந்தைகள் தொடர்பான பிரச்சனைகளான குழந்தைத் திருமணம். இளம்வயது கர்ப்பம். பாலியல் வன்முறை, பள்ளி இடைநிற்றல், போதைப்பொருள் பயன்பாடு குழந்தைத் தொழிலாளர், சமூக ஊடகங்களின் தாக்கம், பாலின வேறுபாடு மற்றும் வேறு எந்தவிதமான குழந்தைகள் தொடர்பான பிரச்சனைகள் என் கவனத்திற்கு வந்தாலும் உடனடியாக அக்குழந்தைகளை பாதுகாக்கும் செயலில் ஈடுபடுவேன். சாதி, மத, இன, வேறுபாடு இன்றி அனைத்து குழந்தைகளையும், சமத்துவமாக நடத்துவேன். 


பாலின தேர்வு நிலையற்ற குழந்தைகளுக்கான பாதுகாப்பு சூழலை அனைத்து நிலையிலும் உறுதிசெய்வேன். மாற்றுதிறன்கொண்ட குழந்தைகள், மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் மற்றும் ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கு அவர்களது அனுகல்களை உறுதி செய்து பாதுகாப்பு மற்றும் பராமரிப்பினை ஏற்படுத்திக்கொடுப்பேன். குழந்தை தொடர்பான பிரச்சனைகள் என் கவனத்திற்கு வரும் பட்சத்தில் உடனடியாக 1098, 181 மற்றும் அருகே உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் கொடுப்பேன். நம் எதிர்காலத்தில் முதலீடு செய்வது என்பது நம் குழந்தைகளுக்காக முதலீடு செய்வதாகும் என்பதை உணர்ந்து குழந்தைகள்  பாதுகாப்பு நடவடிக்கையில் தமிழ்நாடு அரசுடன் ஒருங்கிணைந்து  செயலாற்றுவேன் என்று மனதார  உறுதியளிக்கிறேன். குழந்தை நேய சமூகத்தை இணைந்து உருக்குவோம் உறுதிசெய்வோம். 


என்ற உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வாசிக்க அனைத்துத்துறை அலுவலர்கள் ஏற்றுக் கொண்டனர்.தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் குழந்தைகள் தின விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை கையெழுத்திட்டு துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, அனைத்துத்துறை அலுவலர்கள், மாணவ, மாணவியர்கள், கையெழுத்திட்டு குழந்தைகள் தின விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


மேலும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையில் சிறப்பாக பணியாற்றி அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பரிசுகளை வழங்கினார். குழந்தைகள் நலத்துறையின் சார்பில் செயல்படும் இல்லங்களை சேர்ந்த குழந்தைகளுக்கு மற்றும் பள்ளி குழந்தைகளுக்கும் பரிசு பொருட்கள் மற்றும் இனிப்புகளை வழங்கினார். 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் (பொது) முகமது குதுரத்துல்லா, செல்வராஜ் (வளர்ச்சி) குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்  உமா மகேஷ்வரி, மாவட்ட குழந்தைகள் உதவி மைய ஒருங்கிணைப்பாளர் தினேஷ் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.