ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி அவர்கள் தலைமையில் அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்கள் (EROs) உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் (AEROs), 420 கூடுதல் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் மேற்பார்வை அலுவலர்களுக்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) பணிகள் தொடர்பான கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் 08 வாக்காளர் பதிவு அலுவலர்களும், ஏற்கனவே நியமிக்கப்பட்ட 29 உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களும், புதிதாக நியமிக்கப்பட்ட 15 உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களும் உட்பட மொத்தம் 44 உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் (AEROs) கலந்து கொண்டனர். இக்கூட்டத்தின் போது, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் முக்கிய செயல்முறைகள் குறித்து விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன. மேலும், வீடு தோறும் கணக்கெடுப்பு (House-to-House Enumeration), வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு (Draft Roll Publication), மனுக்கள் மற்றும் எதிர்ப்புகள் (Claims&Objections) பெறுதல் மற்றும் தீர்வு நடைமுறைகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.
கணக்கெடுப்பு படிவங்கள் தொடர்பான அனைத்து பணிகளையும் வரும் டிசம்பர் 4-ஆம் தேதிக்குள் முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்று அனைத்து அலுவலர்களுக்கும் தெளிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது. அதேபோல், வாக்காளர் பட்டியல் முழுமை மற்றும் துல்லியம் உறுதி செய்ய, தரவு சரிபார்ப்பு, புகார் பெறல் மற்றும் தீர்வு நடவடிக்கைகள் தொடர்பாகவும், எந்தவொரு தகுதியுள்ள அனைத்து குடிமக்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுகிறார்கள் என்பதையும், அத்தகைய தகுதியுள்ள யாதொரு குடிமக்களும் வாக்காளர் பட்டியலிலிருந்து விடுபட மாட்டார்கள் என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு தேவையான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.
%20(1).jpg)
.jpg)
.jpg)
.jpg)
