அதனை தொடர்ந்து, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர்களின் வீட்டிற்கு சென்று பூர்த்தி செய்யப்பட்ட கணக்கெடுப்பு படிவங்களை திரும்ப பெற்று கொள்ள வருவார்கள். எனவே வாக்காளர்கள் ஏற்கனவே தங்களுக்கு வழங்கப்பட்ட படிவங்களை திரும்ப வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் சமர்ப்பிக்க ஏதுவாக கணக்கெடுப்பு படிவங்களை தயார் நிலையில் வைத்திருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. கணக்கெடுப்பு படிவம் தவிர பிற ஆவணங்கள் கணக்கெடுப்பு காலத்தில் சமர்ப்பிக்க தேவையில்லை. இந்தப் பணிக்காக 8 வாக்காளர் பதிவு அலுவலர்கள், 44 உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள், 226 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் மேற்பார்வை அலுவலர்கள் மற்றும் 452 கூடுதல் மேற்பார்வையாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், பிற துறை சார்ந்த அலுவலர்கள் இந்தப் பணிக்காக ஈடுபடுத்தப்பட்டு, பயிற்சி வழங்கப்பட்டு, வாக்காளரின் விவரங்கள் BLO (App) செயலியில் பதிவுற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
19,57,983 படிவங்கள் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது - கலெக்டர் தகவல்...
November 20, 2025
0
இந்திய தேர்தல் ஆணையத்தால் 27.10.2025 அன்று வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டு, ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் 04.11.2025 முதல், மொத்தமுள்ள 2222 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் அனைத்து வாக்காளர்களுக்கும் இல்லந்தோறும் சென்று உரிய வழிகாட்டுதலுடன் கணக்கெடுப்பு படிவம் வழங்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள 19,97,189 வாக்காளர்களில் நாளது வரை 19,57,983 (98%) படிவங்கள் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள கணக்கெடுப்பு படிவங்களும் அனைத்து வாக்காளர்களுக்கும் வழங்கும் பணி விரைவில் நிறைவடையவுள்ளது.
%20(1).jpg)