ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (20.11.2025) டிசம்பர் - 3 உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு சிறப்பு பள்ளியில் பயின்று வரும் மாணவ/மாணவியர்களுக்கு ஓவியப்போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி அவர்கள் துவக்கி வைத்தார்.
டிசம்பர் - 3 உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு சிறப்பு பள்ளியில் பயின்று வரும் மாணவ, மாணவியர்களுக்கான ஓவியப்போட்டியினை இன்றைய தினம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார். இந்த ஓவியப்போட்டியில் செவித்திறன் குறையுடையோருக்கான மேல் நிலைப்பள்ளி, கொங்கு சிறப்பு பள்ளி, அரிமா சிறப்பு பள்ளி, கோகுலம் சிறப்பு பள்ளி, உதயம் சிறப்பு பள்ளி மற்றும் அன்பு சிறப்புப் பள்ளிகளில் பயின்று வரும் மொத்தம் 81 மாணவ மாணவியர்கள் ஓவியப்போட்டிகளில் கலந்து கொண்டனர். இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு டிசம்பர்-3 அன்று நடைபெறும் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் பரிசுகள் வழங்கப்படும்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பூபதி, மாணவ, மாணவியர்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
%20(1).jpg)
.jpeg)
%20(1).jpeg)
%20(1).jpeg)
.jpeg)