ஈரோடு, பவானி, வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் வளாகத்தில் சர்வதேச கூட்டுறவு ஆண்டு-2025 முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் பணியினை இன்று (08.11.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி அவர்கள் மரக்கன்றுகளை நட்டு வைத்து பணியினை துவக்கி வைத்தார்.
இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசும் போது தெரிவித்ததாவது,
2025 - ஆம் ஆண்டு உலகளவில் சர்வேதச கூட்டுறவு ஆண்டாக கொண்டாடப்படுகிறது. அதன் அடிப்படையில் அனைத்து பகுதிகளிலும் கூட்டுறவு தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், பசுமையாக்கும் வகையிலும் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து, ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 25,000 மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் ஈரோடு, மாவட்டத்தில் தொட்டிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், அந்தியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் (கிடங்கு), கீழ்வாணி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், கள்ளிப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், கணக்கம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், புஞ்சை துறையம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம். டி.என்.பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம். கொங்கர்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம். பெரிய கொடிவேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், சத்தியமங்கலம் பல்நோக்கு கூட்டுறவு சங்கம் ஆகிய இடங்களில் தேக்கு, மகோகனி, நாவல், மகிழம். பனைவிதை என 2000 மரக்கன்று விதைகள் நடப்பட்டு பாதுகாக்கபடவுள்ளது என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில். ஈரோடு மண்டல இணைப்பதிவாளர் ப.கந்தராஜா, ஈரோடு மாவட்ட நுகர்வோர் கூட்டுறவுச் சங்கங்களின் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் இணைப்பதிவாளர் /மேலாண்மை இயக்குநர் த.செல்வக்குமரன், ஈரோடு மாவட்ட கூட்டுறவு ஒன்றிய கூட்டுறவு சார்பதிவாளர் / செயலாட்சியர் மு.பா.பாலாஜி மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
%20(1).jpg)
%20(1).jpeg)
.jpeg)
.jpeg)