Type Here to Get Search Results !

தேர்தல் 2026- க்கான வாக்கு எண்ணும் மையங்களில் முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு...


ஈரோடு மாவட்டம், சித்தோடு அரசினர் பொறியியல் கல்லுாரி, கோபி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் இன்று (28.11.2025) மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி  அவர்கள் சட்டமன்ற தேர்தல் 2026-க்கான வாக்கு எண்ணும் மையத்தியங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.








ஈரோடு மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் 2026-ஐ முன்னிட்டு பல்வேறு முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து இன்று (28.11.2025) மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர்  கந்தசாமி அவர்கள், சித்தோடு அரசு பொறியியல் கல்லூரியில் ஈரோடு (மேற்கு), ஈரோடு (கிழக்கு), மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும், கோபி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் கோபிச்செட்டிபாளையம் மற்றும் பவானிசாகர் ஆகிய  2 சட்டமன்ற தொகுதிகளுக்கும், வாக்கு எண்ணும் மையம் அமைப்பதற்கு தேவையான கட்டமைப்பு வசதிகள் குறித்தும் வாக்குப் பெட்டிகள் இருப்பறை, வாக்கு எண்ணும் மையத்தில் அலுவலர்களுக்கான அறை வசதி, தேர்தல் முகவர்களுக்கு தேவையான அறை வசதிகள் குறித்தும் மற்றும் குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, மின்சாரம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து குறித்தும் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.








இந்த ஆய்வின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ.சுஜாதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)  முகமது குதுரத்துல்லா உட்பட  தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.



 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.