ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், இன்று (28.11.2025) கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்காக நடைபெற்ற மூன்றாவது சிறப்பு கல்விக் கடன் முகாமில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.கந்தசாமி இ.ஆ.ப., அவர்கள் 49 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.2.5 கோடி மதிப்பீட்டிலான கல்விக்கடனுதவிக்கான ஆணைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது,
தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வியை ஊக்குவிப்பதற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக 6 வகுப்பு முதல் 12 வகுப்பு வரை அரசுப்பள்ளிகளில் படிக்கும் பெண்களுக்கு புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. கல்விக்கடன் வழங்குவதன் மாணவர்களுக்கு நல்ல எதிர்காலத்தை ஏற்படுத்தி தருகிறது. மாணவர்கள் கல்வி கடன் என்பது கடன் அல்ல, வருங்கால முதலீடு ஆகவே எந்த தயக்கமும் இன்றி வங்கிகள் கடன் வழங்க வேண்டும்.
மேலும் கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வித்யாலட்சுமி இணைய தளம் மூலம் விண்ணப்பிக்க உதவி செய்ய வேண்டி வலியுறுத்தினார். கல்வி கடன் முகாம் நடத்துவது மூலம் இந்த ஆண்டு இலக்கான ரூ.75 கோடிகள் எட்டப்பட வேண்டும். தற்போது இலக்கான ரூ.75 கோடியை தாண்டி சுமார் 98 கோடி அளவிற்கு இலக்கு எட்டப்பட்டுள்ளது, இந்த நிகழ்ச்சியில் கல்வி கடன் புதிதாக விண்ணப்பிக்க மாணவர்களுக்கு விண்ணப்பிக்க உதவியும் செய்யப்பட்டது என தெரிவித்தார்.
இம்முகாமில் கல்விக்கடன் வழிக்காட்டி திரு.அன்பரசு அவர்கள் கல்விகடன் எவ்வாறு மாணவர்களின் வாழ்க்கையில் முன்னேற்றத்தை ஏற்படுத்துகிறது என எடுத்துரைத்தார். இந்த முகாமில் 49 மாணவ மாணவியர்களுக்கு கல்விகடன் ரு 2.5 கோடி அளவுக்கு ஒப்புகை கடிதம் வழங்க பட்டது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள வங்கிகள் மூலம் இந்த நிதி ஆண்டு ஆரம்பம் முதல் இன்று வரை சுமார் 1300 மாணவர்களுக்கு 98 கோடி அளவுக்கு கல்வி கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் வங்கியாளர்கள்,மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என 200 -கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திரு.விவேகானந்தன், ஈரோடு கனரா வங்கி வட்டார மேலாளர் திரு.பவித்திரன், மாவட்ட முன்னோடி வங்கி முதுநிலை மேலாளர் திரு.எஸ்.சாயிக்கண்ணன், வங்கியாளர்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
%20(1).jpg)
.jpeg)
%20(1).jpeg)
.jpg)
%20(1).jpg)