வேளாண்மை, கால்நடை மற்றும் மீன்வளர்ப்பு ஆகிய துறைகள் இணைந்து வேளாண் - புத்தொழில் (Agri - Startup) தொடங்க முன் வருவோருக்கு மானியம் வழங்கப்படும் என வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.இத்திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்புவோர் புத்தொழில் நிறுவனத்திற்கான டான்சிம் (TANSIM) அல்லது ஸ்டார்ட்அப் இந்தியா (STARTUP INDIA) நிறுவனத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.
பயனாளி நிறுவனமானது கம்பெனிகள் சட்டம் 2013 அல்லது வரையறுக்கப்பட்ட பொறுப்பு கூட்டாண்மை சட்டம் (LLP) 2008 அல்லது பதிவு செய்யப்பட்ட கூட்டாண்மை நிறுவன சட்டம் 1932 ஆகிய ஏதாவதொனில் பதிவு செய்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர் இந்திய நாட்டை சேர்ந்த புத்தாக்க நிறுவனமாக இருத்தல் வேண்டும். கடந்த மூன்று வருடங்களின் சராசரி இலாபமானது ரூபாய் ஐந்து இலட்சத்திற்கும் குறைவாக இருத்தல் வேண்டும். அந்நிறுவனம் புதுமையான முயற்சிகளை மேற்கொண்டு அதன் தயாரிப்புகள் மற்றும் செயல்பாடுகள் மூலம் அதிக வேலை வாய்ப்பு, அதிக வருமானம் மற்றும் சமூக மேம்பாட்டை உருவாக்கும் வகையில் இருக்க வேண்டும். அரசு அல்லது அரசுசார்ந்த பிற நிறுவனங்களிடமிருந்தோ எந்த கடன் நிலுவையும் வைத்திருத்தல் கூடாது.
புதிதாக தொடங்கப்பட்டுள்ள புத்தொழில் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக ரூ.10.00 இலட்சம் வரையிலும், ஏற்கனவே தொடங்கப்பட்ட தொழில் நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை சந்தைப்படுத்த ரூ.25.00 இலட்சம் வரையிலும் மானியம் வழங்கப்படுகிறது. இதில் பயன்பெற விரும்புவோர் www.agrimark.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, ஈரோடு வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) அலுவலகம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும், இது குறித்து கூடுதல் விவரம் பெற வ.சுகன்யா - 8778593957, ப.அபிநயா - 8883368510 மற்றும் ந.து.பிருந்தா - 9952884821 ஆகிய வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
%20(1).jpg)