தற்போது வெளியிடப்பட்ட கூட்டுறவுத் துறை உதவியாளர் பணிக்காலியிடத்திற்கான தேர்வு முடிவுகளில் இவ்வலுவலக தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக நடத்தப்பட்ட இலவச இணையவழி பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்ட மாணவர்களில் SRB எழுத்துத் தேர்வில் 7 பேரும் DRB எழுத்துத் தேர்வில் 25 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு நடத்தப்பட்ட TNPSC-Group-II, Group -IV, TNUSRB, TET ஆகிய பயிற்சி வகுப்புகளில் பல்வேறு மாணவர்கள் தேர்ச்சி பெற்று அரசுப்பணி பெற்றுள்ளனர். ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் படித்த 12 மாணவர்கள் 2024-இல் நடைபெற்ற TNPSC GROUP -IV தேர்வில் தேர்ச்சி பெற்று கிராம நிர்வாக அலுவலர், ஊரக வளர்ச்சித் துறை, வணிகவரித்துறை, குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம், பொதுப்பணித்துறை, கைத்தறித்துறை போன்ற பல்வேறு அரசுத்துறைகளில் பணிநியமனம் பெற்றுள்ளனர். கடந்த TNPSC-Group-II/IIA முதனிலைத் தேர்வில் 25 மாணவர்கள் தேர்ச்சி பெற்று முதன்மைத் தேர்வில் 4 மாணவர்கள் தேர்ச்சி பெற்று அரசுப்பணி பெற்றுள்ளனர்.
இவ்வாய்ப்பினை ஈரோடு மாவட்டத்தைச் சார்ந்த அனைவரும் பயன்படுத்திக்கொள்ளுமாறு ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கின்றார். மேலும் விவரங்களுக்கு 0424-2275860, 9499055943 என்ற தொலைபேசியினை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
%20(1).jpg)