ஈரோடு, சித்தோடு அரசு பொறியியல் கல்லூரியில் மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சியில் வளர்தமிழ் வாழ்த்தும் எனும் தலைப்பில் சொற்பொழிவாளர் பத்மஸ்ரீ முனைவர். நர்த்தகி நடராஜ் அவர்கள் சொற்பொழிவாற்றும் நிகழ்ச்சி, ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி அவர்கள் தலைமையில் இன்று (13.11.2025) நடைபெற்றது.
இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. அந்ந வகையில் நடப்பாண்டு மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சியானது 3-வது முறையாக நடத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் சித்தோடு அரசு பொறியியல் கல்லுாரி, வேளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி, நந்தா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி, துடுப்பதி செங்குந்தர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி, சூர்யா பொறியியல் கல்லுாரி என 5 கல்லுாரிகளை சேர்ந்த 1050 மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வானது கல்லுாரி மாணவர் மாணவியர்களிடையே தமிழ் மரபு மற்றும் பண்பாடு குறித்து எடுத்துரைக்கும் வகையில் அமைந்துள்ளது.
நம்முடையதமிழ்நாடுஅரசு உயர்கல்வித்துறைக்கும்,பள்ளிக்கல்வித்துறைக்கும் எண்ணற்ற சாதனைகள் பிற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. அதே போல தமிழ் இணைய கல்வி கழகம், உயர்க்கல்வி கழகம் இணைந்து இது போன்ற மாபெரும் தமிழ் கல்வி கனவு என்ற சொற்பொழிவு நிகழ்ச்சியினை நடத்தி வருகிறது. மாபெரும் தமிழ் கனவு நிகழ்வானது மாணவர்களின் நலனுக்காகவும், நம்முடைய பழங்கால மரபு மற்றும் தொன்மை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும், மிக சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்தப்படுகிறது. ஒவ்வொரு சொற்பொறிவாளர்கள் தமிழ் மரபு குறித்தும் மற்றும் பண்பாடு குறித்தும் கூறும் போது நம்முடைய மாநிலத்தை பற்றியும், தமிழ்மொழி பற்றியும் ஏராளமாக தெரிந்து கொள்ள முடிகிறது. இந்நிகழ்ச்சியானது கல்லுாரி மாணவ, மாணவியர்களுக்கு இது ஒரு மிக சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது. நம்முடைய மரபினை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டுமென்றால் திருக்குறளை படிக்க வேண்டும். திருக்குறளானது ஒட்டுமொத்த தமிழ் கலாச்சாரத்திற்கு வழங்கப்பட்ட ஒரு கொடையாகும். தம்முடைய சிந்தனையினை, அறத்தினை வளர்த்துக்கொள்ள வேண்டுமென்றால் திருக்குறள் முழுமையாக வாசிக்க வேண்டும் என தெரிவித்தார்,
மேலும் இந்நிகழ்ச்சியில் சிறப்பாக கேள்விகளை கேட்ட 5 மாணவ மாணவியர்களுக்கு கேள்வி நாயகன் மற்றும் கேள்வி நாயகிக்கான பாராட்டு சான்றிதழ்களையும், சிறப்பாக தமிழ் வாசிப்பு தெளிவுரை வழங்கிய 5 மாணவ மாணவியர்களுக்கு”தமிழ் பெருமிதம் வாசிப்பு” பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்த குமார், சித்தோடு அரசு பொறியியல் கல்லுாரி முதல்வர் சாரதா, அரசு சிக்கய்ய கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர் திருக்குமரன், மாணவ மாணவியர்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
%20(2).jpg)
.jpeg)
%20(1).jpeg)
.jpeg)
.jpg)
%20(1).jpeg)
.jpg)