ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (20.11.2025) மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தின் மூலம் நடைபெற்ற இலவச பயிற்சி வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்களை பாராட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேடயம் வழங்கினார்.
இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசும் தெரிவித்ததாவது ,
ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி மையத்தில் TNPSC Group I, II/IIA, IV, TNUSRB SI,PC, SSC, RRB, BANKING, Health Inspector தொழில்நுட்ப தேர்வுகளுக்கு, தேர்வு அறிவிக்கைகளுக்கிணங்க இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பில் கடந்த 06.08.2025 அன்று அறிவிக்கப்பட்ட கூட்டுறவு உதவியாளர் பணிகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு இணையதளம் வாயிலாக நடத்தப்பட்டது. இதில் 100-கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பயிற்சி பெற்றனர். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வாயிலாக 59 முறை இணையவழி வகுப்புகள் நடத்தப்பட்டது.
தற்போது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில் மாநில ஆட்சேர்ப்பு வாரியத்தின் கூட்டுறவு உதவியாளர் பணிக்கான தேர்வில் 7 மாணவ மாணவியர்களும், மாவட்ட அளவிலான கூட்டுறவு உதவியாளர் பணிக்கான தேர்வில் 48 மாணவ மாணவியர்களும் என மொத்தம் 55 நபர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் மாநில ஆட்சேர்ப்பு வாரியம் மற்றும் மாவட்ட ஆட்சேர்ப்பு வாரியம் இரண்டிலும் 7 நபர்கள் தேர்ச்சி பெற்று பெருமை சேர்த்துள்ளனர். இன்றைய தினம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் மேற்படி, தேர்ச்சி பெற்ற மாணவ,மாணவியர்களுடன் நேரில் சந்தித்து கலந்துரையாடி கேடயம் வழங்கி வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
தொடர்ந்து, மாவட்ட பதிவாளர் கூட்டுறவு (ஓய்வு) தியாகராஜன் அவர்கள் எதிர்வரும் நேர்காணல் தேர்வுக்கான நுணுக்கங்களை மாணவ, மாணவியர்களுக்கு எடுத்துரைத்தார்.
இந்நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் உதவி இயக்குனர் ரா.ராதிகா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சாந்தி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
%20(1).jpg)
.jpeg)
.jpeg)
%20(1).jpeg)
%20(1).jpeg)
.jpeg)
%20(1).jpeg)
.jpeg)
%20(1).jpeg)