அதனை தொடர்ந்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர்களின் வீட்டிற்கு சென்று பூர்த்தி செய்யப்பட்ட கணக்கெடுப்பு படிவங்களை திரும்ப பெற வருவார்கள். எனவே வாக்காளர்கள் ஏற்கனவே தங்களுக்கு வழங்கப்பட்ட படிவங்களை உரியவாறு பூர்த்தி செய்து திரும்ப வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் சமர்ப்பிக்க ஏதுவாக கணக்கெடுப்பு படிவங்களை தயார் நிலையில் வைத்திருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரால் நியமிக்கப்பட்ட வாக்குச்சாவடி நிலை முகவர்களிடமும் வழங்கலாம்.
கணக்கெடுப்பு படிவம் தவிர பிற ஆவணங்கள் கணக்கெடுப்பு காலத்தில் சமர்ப்பிக்க தேவையில்லை. இந்தப் பணிக்காக 8 வாக்காளர் பதிவு அலுவலர்கள், 44 உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள், 226 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் மேற்பார்வை அலுவலர்கள் மற்றும் 452 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் கூடுதல் மேற்பார்வை அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் சார்பாக 6820 வாக்குச்சாவடி நிலை முகவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், 475 பிற துறை சார்ந்த அலுவலர்கள் இந்தப் பணிக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் வாக்காளர்கள் தங்களது பெயர்களை 2002-ம் ஆண்டின் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என்பதை இந்திய தேர்தல் ஆணையத்தின் voters.eci.gov.in என்ற முகவரியில் தேடிப் பார்த்து எடுத்துக்கொள்ளலாம். மேலும், 2002-ம் ஆண்டின் வாக்காளர் பட்டியலை PDF வடிவில் ஒரு வாக்குச்சாவடியின் முழு வாக்காளர் பட்டியலையும் பதிவிறக்கம் (Download) செய்து தங்களது பெயர் உள்ளதா என்பதை சரிபார்த்து வாக்காளர் கணக்கீட்டுப் படிவங்களை பூர்த்தி செய்து கொள்ளலாம். மேலும், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் உள்ள BLO App வாயிலாகவும் தெரிந்து கொள்ளலாம். மேலும், புகார் மற்றும் சந்தேகங்களை 1950 (Help Desk) என்ற இலவச எண்ணில் தொடர்பு கொண்டும், 9042580535 என்ற எண்ணிற்கு WhatsApp மூலம் புகார் தெரிவிக்கலாம், என ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
%20(1).jpg)