ஈரோடு மாநகராட்சி லெமன் டிரி ஹோட்டலில் இன்று (05.11.2025) ஈரோட்டில் உற்பத்தியாகும் கைத்தறி ரகங்களில் புது வடிவமைப்பினை புகுத்தி அவற்றை பன்முகப்படுத்தி ஏற்றுமதி செய்யக்கூடிய ரகங்களாக மாற்றுதல் தொடர்பாக கருத்தரங்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ச.கந்தசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
ஈரோடு வட்டத்தில் 100 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களும் அதில் 50,000 நெசவாளர்களும் நெசவு தொழில் நேரடியாக ஈடுபட்டு வருகின்றனர். தொழில் செய்பவர்களையும் சேர்த்து சுமார் ஒரு லட்சம் பேர் ஈரோடு மாவட்டத்தில் மட்டும் நோடியாகவும் மறைமுகமாகவும் கைத்தறி நெசவுத் தொழிலால் வேலை வாய்ப்பு பெறுகின்றனர். மேலும் ஈரோடு மாவட்டத்தில் சென்னிமலை, தாண்டாம்பாளையம், சிவகிரி, கவுந்தபாடி, பவானி, அந்தியூர், கோபி, சத்தியமங்ககம், டிஜிபுதூர், தொட்டம்பாளையம் பகுதிகளில் நெசவாளர்கள் அதிகம் உள்ளார்கள். இங்கு தயாரிக்கப்படும் சென்னிமலை பெட்ஷீட், பவானி ஜமக்காளம் ஆகியவை உலக பிரசித்தி பெற்றது. அதுமட்டுமல்லாமல் மென்பட்டுசேலைகள் கோரா காட்டன் சேலைகள், கால்மிதி மேட்டுகள், யோகா மேட்டுகள், துண்டுகள் டஸ்டர் ரகங்களும் இவர்களால் தயாரிக்கப்படுகின்றன.
சென்னிமலை பகுதியில் உள்ள கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் சமையலறை உடை, கையுறை, சமையலறை பயன்படுத்தபடும் துண்டு, நாற்காலிக்கு போடப்படும் துண்டு ஆகிய மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயார் செய்து கோ ஆப்டெக்ஸ் மூலமாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
மேலும் சென்னிமலையில் உள்ள சென்னிமலை தொழிலியல் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கமானது ஏமன் நாட்டில் உபயோகப்படுத்தப்படும் பிரத்தியோக துணி ரகங்களை தயார் செய்து ஏஜென்ட் மூலம் ஏமன் நாட்டிற்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர்.
தேசிய ஆடை அலங்காரம் தொழில்நுட்ப நிறுவனம் கல்வி நிறுவனத்தின் ஒரு குழுவானது ஈரோட்டில் உள்ள கைத்தறி நெவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு நேரில் வந்து கைத்தறியில் உற்பத்தி செய்யப்படும் ரகங்களில் எவ்வாறு புதிய வடிவமைப்புகளை உட்புகுத்தலாம் என ஆய்வு செய்து, பெட்ஷீட், ஜமக்காளம் மற்றும் கோரா காட்டன் சேலைகள் ஆகிய கைத்தறி ரகங்களில் புதியதாக 112 டிசைன்களை வடிவமைத்து புதிய டிசைன்களில் 3,852 எண்ணிக்கையிலான கைத்தறி ரகங்களை உற்பத்தி செய்து கோ-ஆப்டெக்ஸ் மற்றும் வெளி சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.
இவ்வாறாக கைத்தறி துறையானது ஏற்கனவே கைத்தறி ரகங்களை பன்முகப்படுத்தி கைத்தறி ரகங்களில் மதிப்பு கூட்டுதல், கைத்தறி இரகங்களில் புதிய வடிவமைப்பிணை உருவாக்குதல் மற்றும் புதிய வடிவமைப்பினை கொண்டு கைத்தறி இரகங்களை உற்பத்தி செய்து சந்தைப்படுத்துதல் ஆகிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதன்மூலம் கைத்தறி துறையானது கைத்தறி ரகங்களில் மதிப்பு கூட்டுதல், பன்முகப்படுத்துதல், புதியவமைப்பினை உருவாக்குதல் மற்றும் சந்தைப்படுத்துதல் ஆகிய நடவடிக்கைகளில் கைத்தறி ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளது என தெரிவித்தார்.
இன்றைய தினம் பவானி பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவர் லண்டனில் நடந்த ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சியில் ஜமுக்காளத்தை கொண்டு ஆடை அணிகலங்கள் கைப்பைகள் அறிமுகப்படுத்தியதை தொடர்ந்து அவருக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டினார்.
இக்கருத்தரங்கில் கைத்தறி ஏற்றுமதி அபிவிருத்தி குழுமம் நிர்வாக இயக்குநர் ஸ்ரீதர், துணைத்தலைவர் ரமேஷ், இந்திய கைத்தறி தொழில்நுட்ப நிறுவன இயக்குனர் (சேலம்) தென்னரசு, உதவி இயக்குநர் (கைத்தறித்துறை) சரவணன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
%20(1).jpg)
.jpg)
.jpeg)
%20(1).jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)