Type Here to Get Search Results !

ஆசிரியர் தகுதித் தேர்வுகளுக்கான இலவச முழுமாதிரித் தேர்வு - மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்


ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு ( TET PAPER I & PAPER II ) போட்டித் தேர்வுகளுக்கான மண்டல அளவில் இலவச முழு மாதிரித் தேர்வு 08.11.2025 அன்று (நேரம்-11am முதல் 2pm) ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது. இத்தேர்வில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்களது விவரங்களை https://forms.gle/ovgkrtpSSQbAeP6L7 என்ற Google Form link-இல் பூர்த்தி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

கடந்த ஆண்டு நடத்தப்பட்ட TNPSC-Group-II, Group -IV, TNUSRB, TET ஆகிய பயிற்சி வகுப்புகளில் பல்வேறு மாணவர்கள் தேர்ச்சி பெற்று அரசுப்பணி பெற்றுள்ளனர். ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் படித்த 12 மாணவர்கள் 2024-இல் நடைபெற்ற TNPSC GROUP -IV தேர்வில் தேர்ச்சி பெற்று கிராமநிர்வாக அலுவலர், ஊரகவளர்ச்சித்துறை, வணிகவரித்துறை, குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம், பொதுப்பணித்துறை, கைத்தறித்துறை போன்ற பல்வேறு அரசுத்துறைகளில் பணிநியமனம் பெற்றுள்ளனர். கடந்த TNPSC-Group-II/IIA முதனிலைத்தேர்வில் 25 மாணவர்கள் தேர்ச்சி பெற்று முதன்மைத்தேர்வில் 4 மாணவர்கள் தேர்ச்சி பெற்று அரசுப்பணி பெற்றுள்ளனர். 

இவ்வாய்ப்பினை ஈரோடு மாவட்டத்தைச் சார்ந்த அனைவரும் பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு 0424-2275860, 9499055943 என்ற தொலைபேசியினை தொடர்பு கொள்ளலாம்.




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.