ஈரோடு, சித்தோடு, கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் (ஆவின்) அலுவலக வளாகத்தில், பால்வளத் தந்தை எஸ்.கே.பரமசிவன் அய்யா அவர்களின் திருவுருவச்சிலை அமைக்க உள்ள இடத்தினை மாண்புமிகு வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள் இன்று (05.11.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், ஈரோடு மாவட்டம், சின்னியம்பாளையத்தில் பிறந்து, நாட்டு விடுதலைக்காக பாடுபட்டதோடு, தன்னுடைய அயராத முயற்சிகளால் பால் உற்பத்தியைப் பெருக்கி, தமிழ்நாட்டில் வெண்மைப் புரட்சிக்கு வித்திட்ட பால்வளத் தந்தை எஸ்.கே.பரமசிவன் அய்யா அவர்களுக்கு ஈரோடு பால் பண்ணையில் திருவுருவச்சிலை அமைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டார்கள். அதனைத் தொடர்ந்து, ஈரோடு, சித்தோடு, கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் (ஆவின்) அலுவலக வளாகத்தில், ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் பால்வளத் தந்தை எஸ்.கே.பரமசிவன் அய்யா அவர்களின் திருவுருவச்சிலை அமைக்க உள்ள இடத்தினை மாண்புமிகு வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் அவர்கள் இன்றைய தினம் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு,பணியினை விரைவாக தொடங்கிட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து, சேலம்-கோயம்புத்தூர் நெடுஞ்சாலையில் NH 544 இல், லட்சுமி நகர் சந்திப்பில் கி.மீ 58+250 இல் மேம்பாலம் கட்டுவது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார். சேலம் பக்கம் நோக்கி லட்சுமி நகர் சந்திப்பில் ஏற்கனவே ஒரு மேம்பாலம் உள்ளது. அதேசமயம் கோவை பக்கம் மேம்பாலம் இல்லாததால், ரவுண்டானாவில் விபத்துகள் மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்படா வண்ணம் மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. லட்சுமிநகர் பகுதியில் மேம்பாலம் கட்டுவதற்கான மதிப்பீட்டை தேசிய நெடுஞ்சாலைத்துறை (NHAI) சுமார் 45 கோடி ரூபாய்க்கு தயாரித்துள்ளது. இந்தப் பாலம் 700 மீட்டர் நீளத்திற்கு ஆறு வழிச்சாலை அமைப்புடன் கட்டப்படும். பணிகள் தொடங்கப்படும் முன் தற்காலிக மாற்று நடவடிக்கைகள் மேற்கொண்டு போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்கள் நிகழா வண்ணம் பணிகளை மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வுகளின்போது, ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி, ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் வி.சி.சந்திரகுமார், குழுத் தலைவர் (தேசிய நெடுஞ்சாலைத்துறை) சீனிவாசலு உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்
.jpg)
.jpeg)
.jpeg)
%20(1).jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
%20(1).jpeg)