மாருதி சிலம்ப கலை பயிற்சி பள்ளியின் சார்பில் ஈரோட்டில் 1 மணி நேரம் நின்ற இடத்தில் கண்கள் கட்டிக்கொண்டு வெட்டு, வாரல், பகுல், தலைவாரல் ஆகிய நிலைகளில் சிலம்பம் சுற்றி சாதனை படைக்கும் நிகழ்ச்சி 30.11.2025 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் 4 வயது முதல் 15 வயது வரை உள்ள பள்ளி மாணவ - மாணவியர்கள் 31 பேர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் நோபல் உலக சாதனையாளர்கள் நிர்வாக இயக்குனர் முனைவர் ஹேமலதா, தீர்ப்பாளர்கள் பரமேஸ்வரன், மணிமேகலை ஆகியோர் கலந்து கொண்டு சாதனை படைத்த மாணவ - மாணவிகளுக்கு கோப்பைகள், சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினர்.
இது குறித்து இயக்குனர் முனைவர் ஹேமலதா கூறுகையில்,
தற்காப்பு கலை கண் பார்வை இல்லாதவருக்கும் பாதுகாப்பு தரும் என்பதை வலியுறுத்தி இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பார்வை குறைபாடு தற் காப்புக்கு தடையாக இருக்காது என்பதையும் இது விளக்கும், என்று கூறினார்.
இந்நிகழ்ச்சியில் இன்டர்நேஷனல் சிலம்ப கமிட்டி செயலாளர் தியாகு நாகராஜ், அகில இந்திய சிலம்பம் அசோசியேஷன் துணைத் தலைவர் எஸ் எஸ் மோகனசுந்தரம் ஆகியோர் பங்கேற்றனர்.
%20(1).jpg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
%20(1).jpeg)
.jpeg)