Type Here to Get Search Results !

அரசு மருத்துவமனையினையில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர்...


ஈரோடு மாநகராட்சி, அரசு தலைமை மருத்துவமனையில், ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி அவர்கள் (02.12.2025) இன்று  நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



இந்த ஆய்வின்போது, ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள், மருந்தகம், மருந்து இருப்பு, ஆய்வகம், அவசர சிகிச்சை பிரிவு, படுக்கை வசதி, கழிப்பறை, புற மருத்துவ பயனர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறை, சமையலறை, வாகன நிறுத்துமிடம், சுற்றுப்புறத்தூய்மை குறித்து ஆய்வு மேற்கொண்டு, மருத்துவ பயனர்களுடன் மருத்துவர்கள் வழங்கும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், மருத்துவ தினசரி வருகை தரும் மருத்துவ பயனர்கள் விபர பதிவேடு, மருத்துவ கருவிகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் பயன்பாடு, மருத்துவ பணியாளர்கள் விபரம், பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட விபரம் மற்றும் தொடர் கண்காணிப்பு பணிகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டு மருத்துவமனை மற்றும் அதன் சுற்றுப்புறங்களை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்குமாறு மருத்துவ அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.



இந்த ஆய்வின்போது, இணை இயக்குநர் (நலப்பணிகள்) பொ மரு. வெங்கடேஷ் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.