Type Here to Get Search Results !

காலியாக உள்ள 9 கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு - கலெக்டர் நேரில் ஆய்வு...


ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர்  ச.கந்தசாமி  அவர்கள் இன்று (29.11.2025) ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலகத்தில் ஈரோடு வட்டத்தில் காலியாக உள்ள 9 கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு நடைபெற்ற வேளாளர் மெட்ரிக் மகளிர் மேல்நிலைப்பள்ளி, மற்றும் வேளாளர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் அமைக்கப்பட்டுள்ள மையங்களில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலகத்தில் ஈரோடு வட்ட அளவில் காலியாக உள்ள 9 கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப இணைய வழியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, வருவாய் வட்டாட்சியர் மூலம் விண்ணப்பங்கள் கூராய்வு செய்யப்பட்டு, ஏற்பளிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கும், மாவட்ட வேலைவாய்ப்பகம் மற்றும் முன்னாள் படைவீரர் நல அலுவலகம் மூலம் பெறப்பட்ட பட்டியலில் உள்ள ஏற்பளிக்கப்பட்ட விண்ணதாரர்களுக்கும் இன்று காலை 09.00 மணி முதல் 9.30 மணி வரை தமிழ் வாசித்தல் மூலம் எழுத்துத் தேர்வு நடைபெற்றது.


இந்த தேர்வில் 1,104 விண்ணப்பதாரர்களுக்கு தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் 772    விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுதினார்கள். இதில் 332 விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத வருகை தரவில்லை. இதில் 3 மாற்றுத்திறானிகள் எழுத்து தேர்வு எழுதினார்கள்.


இந்த ஆய்வின் போது ஈரோடு வருவாய் கோட்டாட்சியர்  சிந்துஜா, ஈரோடு வருவாய் வட்டாட்சியர்  முத்து கிருஷ்ணன், மண்டல துணை வட்டாட்சியர்  விஜயகுமார் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.