Type Here to Get Search Results !

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் சரிபார்ப்பு பணிகள் துவங்கப்பட்டதை கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டார்.


ஈரோடு மாவட்டத்தில் உள்ள 08 சட்டமன்ற தொகுதிகளுக்கும் எதிர்வரும் சட்டமன்ற பொதுத் தேர்தல், 2026 நடைபெறுவதை முன்னிட்டு, ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) பாதுகாப்பு கிடங்கினை இன்று (11.12.2025) காலை 09.00 மணிக்கு திறக்கப்பட்டு, ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவருமான  ச.கந்தசாமி அவர்கள் தலைமையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் திறக்கப்பட்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல்நிலை சரிபார்ப்பு (First Level Checking – FLC) பணிகள் துவங்கப்பட்டது. பின்பு பிற்பகல் 07.00 மணிக்கு பூட்டப்பட்டது.


இந்தப் பணிகள், பெங்களூரை சேர்ந்த பாரத் எலக்ரானிக்ஸ் லிமிடெட் (Bharat Electronics Limited) மென் நிறுவன பொறியாளர்கள் மற்றும் மாவட்டத்தில் உள்ள துறை சார்ந்த அலுவலர்களைக் கொண்டு சரிபார்ப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்பு கிடங்கில் Ballot Unit – 5777 Control Unit – 3582 மற்றும் VVPAT - 3627 என்ற எண்ணிக்கையிலான வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு முதல்நிலை சரிபார்ப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணியானது சுமார் ஒருமாத காலம் வரை மேற்கொள்ளப்படவுள்ளது.


EVM-களின் பாதுகாப்பு மற்றும் சேமிப்பு தொடர்பான விரிவான நடைமுறைகள், இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் (ECI website: https://www.eci.gov.in/evm-vvpat) கிடைக்கக்கூடிய “Electronic Voting Machine Manual”-இல் குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி சரிபார்ப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்த பணியில் துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தேசிய/மாநில அரசியல் கட்சி பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.









Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.