Type Here to Get Search Results !

வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் மற்றும் இருக்கை பட்டை அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணி....


ஈரோடு மாவட்டம், குமரன் சாலை, (சம்பத் நகர்) கொங்கு கலையரங்கம் அருகில், இன்று (07.01.2026) போக்குவரத்துத் துறையின் சார்பில் வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் மற்றும் இருக்கை பட்டை அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி அவர்கள் துவக்கி வைத்தார்.


சாலை விபத்துகளையும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் குறைக்கும் பொருட்டு பொதுமக்களுக்கு சாலைப் பாதுகாப்பு விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஆண்டு தோறும் சாலைப் பாதுகாப்பு மாதம் நாடு முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான சாலைப் பாதுகாப்பு மாதம் ஜனவரி 01 முதல் 31 வரை அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, ஈரோடு மாவட்ட நிர்வாகத்தால் பொதுமக்களுக்கு சாலைப் பாதுகாப்பு விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த மாதம் முழுமைக்கும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  ஈரோடு மாவட்ட போக்குவரத்துத் துறையால் பொதுமக்களுக்கு தலைக்கவசம் (Helmet) அணிவதன் அவசியம் மற்றும் சாலைப் பாதுகாப்பு விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இந்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.


இன்றைய தினம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், போக்குவரத்துறையின் சார்பில், தேசிய பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு தலைக்கவசம் மற்றும் இருக்கை பட்டை அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.


இந்நிகழ்வில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ.சுஜாதா, ஈரோடு (கிழக்கு) (பொ) வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஜ.ஷேஹ் முகமது, பெருந்துறை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ம.பூங்குழலி, ஈரோடு (மேற்கு)(பொ) வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ம.மாதவன், இயக்க ஊர்தி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.  


 




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.