தமிழ்நாடு அரசு, துணிநூல் துறை மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) இணைந்து நடத்தும் ”International Textile Summit-360” என்ற சர்வதேச ஜவுளி தொழில் மாநாடு 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29 மற்றும் 30 ஆகிய தினங்களில் கொடீசியா வளாகம் கோயம்புத்தூரில் நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டை 2030 ஆம் ஆண்டிற்குள் USD 1 Trillion பொருளாதார மாநிலமாக மாற்றும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தொலைநோக்கு இலக்கை அடைய ஜவுளி தொழில் வளர்ச்சி முக்கிய பங்கு வகிக்கும் வகையில் இம்மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்மாநாட்டில், கருத்தரங்குகள் (Conference), கண்காட்சி (Exhibition), வாங்குபவர் மற்றும் விற்பவர் சந்திப்பு (Reverse Buyer Seller Meets) மற்றும் அழகுநயப்பு காட்சி (Fashion Show) ஆகியவை இடம்பெற உள்ளன. மேலும், சுமார் 100 காட்சியரங்குகள் கொண்ட கண்காட்சியும் நடத்தப்பட உள்ளது.
இந்த கண்காட்சியில் காட்சியரங்குகள் அமைக்க விரும்பும் ஜவுளி தொழில் நிறுவனங்கள் 13.012026-க்குள் திருப்பூர் மண்டல துணை இயக்குநர் அலுவலக மின்னஞ்சல் rddtextilestpr@gmail.com மூலம் விண்ணப்பிக்கலாம். இந்நிகழ்வில் பங்கேற்பதன் மூலம், வெளிநாட்டு முதலீடு மற்றும் ஏற்றுமதிகள் அதிகரித்து, தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். எனவே, அனைத்து ஜவுளித் தொழில் நிறுவனங்கள் மற்றும் ஜவுளித் தொழில் சங்கங்கள் இந்த சர்வதேச மாநாட்டில் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
மண்டல துணை இயக்குநர்,
துணிநூல் துறை,
அறை எண்.505, 5 - வது தளம்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம். திருப்பூர்-641604
மின்னஞ்சல் முகவரி: rddtextilestpr@gmail.com
தொலைபேசி எண்: 98942 60713, 94421 86070
மேலும், மேற்கண்ட கண்காட்சியில் Spinning, Fabric, Garments, Home Textiles, Integrated Manufacturers, Brans from Tamilnadu, Technical Textiles, Sustainablity and Recycling, Raw Material/ Recycled Textile/ Man Made Fibre ஆகிய காட்சியரங்குகள் பங்கு கொள்ள இருப்பதால் ஜவுளித் தொழில் முனைவோர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
%20(1).jpg)