ஈரோடு மாவட்டம் தாளவாடி, தலமலை, தொட்டபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ருத்ர ஜெய வீர ஆஞ்சநேயர் திருக்கோவில் சேவா அறக்கட்டளை மற்றும் ஈரோடு தினசரி காய்கறி சந்தை நண்பர்கள் இணைந்து ஒவ்வொரு மாதமும் அமாவாசையன்று ஈரோடு நேதாஜி காய்கறி சந்தையில் அன்னதானம் வழங்குகின்றனர்.
இதனை தொடர்ந்து, 13வது மாதமான (18.01.2026) தை அமாவாசை முன்னிட்டு தொட்டபுரம் ஆஞ்சநேயர் கோயிலிலும், ஈரோடு காய்கறி மார்க்கெட்டிலும் மற்றும் ஈரோடு கொங்கலம்மன் கோவில் அருகிலும் சுமார் 2000-க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மணியன் மில் ஸ்டோர் உரிமையாளர் பாலாஜி முன்னிலையில் நடைபெற்ற இந்த அன்னதான நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக பவர் கனெக்ட் உரிமையாளர் பாலாஜி, சண்முகம், முன்னாள் மாமன்ற உறுப்பினர் அன்பழகன் மற்றும் கமிட்டியின் மகளிர் அணியினர் கலந்து கொண்டு சுமார் 2000-க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கினர்.
.jpg)
%20(1).jpeg)
%20(1).jpeg)
%20(1).jpeg)
%20(1).jpeg)
.jpeg)
.jpeg)