வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் வாயிலாக நடத்தப்படும் இவ்வேலைவாய்ப்புமுகாம், வேலைநாடுர்கள் மற்றும் வேலைஅளிப்பவர்களுக்கு முற்றிலும் இலவசமாக செயல்படுத்தப்படுகிறது. எனவே, ஈரோடு மாவட்டத்தில் தனியார்துறையில் பணிபுரிய ஆர்வமாக உள்ள அனைவரும் இந்தவேலைவாய்ப்புமுகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறும், இம்முகாமின் வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்டு தனியார்துறையில் பணியமர்த்தம் செய்யப்படும் வேலைநாடுநர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவுஎண் இரத்து செய்யப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரிலோ அல்லது தொலைபேசி எண் 8675412356, 9499055942 மின்னஞ்சல் முகவரி: erodemegajobfair@gmail.com மற்றும் decgc_erode என்ற Instagram Page வாயிலாகவும் தொடர்புகொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஒவ்வொரு மாதமும் மூன்றாம் வெள்ளிக்கிழமை நடத்தப்படுகிறது.........
January 20, 2026
0
ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்தொழில் நெறிவழிகாட்டும் மையத்தில் ஒவ்வொரு மாதமும் மூன்றாம் வெள்ளிக்கிழமை அன்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் பல்வேறு தனியார்துறை வேலை அளிப்பவர்கள் கலந்து கொண்டு தங்களுக்குத் தேவையான எழுதப்படிக்க தெரிந்த நபர்கள் முதல் பட்டப்படிப்பு படித்த நபர்கள் வரை மற்றும் செவிலியர்கள், டெய்லர்கள், கணினிஇயக்குபவர்கள், தட்டச்சர்கள், ஓட்டுநர்கள் போன்ற பணிகளுக்கு தகுதியுள்ள நபர்களை தேர்வு செய்து தனியார்துறையில் பணியமர்த்தம் செய்யப்பட்டு வருகின்றனர். இதன் மூலம் மாதந்தோறும் 100 க்கும் மேற்பட்ட பயனாளிகள் பயனடைந்து வருகின்றனர். மேலும், திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்களும் கலந்துகொண்டு திறன் பயிற்சிக்கு தேவையான நபர்களை தேர்வு செய்து பயிற்சி அளித்து வருகின்றனர். அதன் படி இம்மாதம் 23.01.2026 வெள்ளிக்கிழமை அன்று சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்புமுகாம் காலை 10.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரை ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது.
Tags
.jpg)