Type Here to Get Search Results !

மாற்றுத்திறனாளிகளைப் பணியமர்த்தும் தனியார் துறை நிறுவனங்களுக்கு, ஊதிய மானியம் வழங்கப்படும் என கலெக்டர் அறிவிப்பு......


தனியார் நிறுவனங்களில மாற்றுத்திறனாளிகள் பணியமர்த்தப்படுவதை ஊக்குவிக்கும் பொருட்டு குறைந்தது 10 மாற்றுத்திறனாளிகளைப் பணியமர்த்தும் தனியார் நிறுவனங்களுக்கு ஒரு மாற்றுத்திறனாளி நபருக்கு மாதம் ரூ. 2000/- வீதம் ஊதிய மானியம் வழங்கப்படும் எனவும் கீழ்க்காணும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி தோ்வு செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார். 

1 தனியார் நிறுவனங்கள் குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் பதிவாளர் (Registrar of Companies ROC) / தொழிலாளர் துறை தொழில்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை மேலும் இதர அரசு துறைகளில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களாக இருத்தல் வேண்டும். அந்நிறுவனங்கள் தமிழ் நாட்டில் செயல்பட்டு கொண்டு இருத்தல் வேண்டும்.
2. தனியார் நிறுவனம் தொழிற்சாலை அமைப்புகளில் 10 மாற்றுத்திறனாளிகளை குறைந்தபட்சம் 6 மாதங்கள் தொடர்ந்து பணியமர்த்தியிருக்க வேண்டும். அத்தகைய நிறுவனங்களுக்கு அரசாணை வெளியிடப்பட்ட நாள் முதல் மாதம் ஒரு நபருக்கு ரூபாய் இரண்டாயிரம் வீதம் ஒரு ஆண்டிற்கு ரூ. 24,000 ஊதிய மானியம் அரசால் வழங்கப்படும்.
3.குறைந்தபட்சம் 10 மாற்றுத்திறனாளிகளை பணியமர்த்திய தகுதியுள்ள தனியார் நிறுவனம் தொழிற்சாலை அமைப்புகள் மாற்றுத்திறனாளிகளின் வருகை பதிவேடு உள்ளிட்ட விவரங்களை அந்தந்த மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். 
4. தகுதியுள்ள தனியார் நிறுவனம்/ தொழிற்சாலை அமைப்புகள் அந்தந்த மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் அல்லது மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும் (முழுமையான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலிக்கப்படும்). விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள் பின்வறுமாறு
நிறுவன பதிவு சான்று (GST/ Trade License /EPE
ஒவ்வொரு மாற்றுத்திறனாளியின் UDID அட்டை/
மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை
PF-ESI சான்றுகள் (குறைந்தபட்சம் 6 மாதங்கள்)
பணியாளர் பட்டியல் மற்றும் சம்பள விவரங்கள்
 

கீழ்க்காணும் இணையதளங்களை பயன்படுத்தி விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவா் ச.கந்தசாமி  அவா்கள் தெரிவித்துள்ளார்கள்.






 









Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.