Type Here to Get Search Results !

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.


ஈரோடு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நேற்று (12.01.2026) மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்த குமார் அவர்கள் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்து,  தொழிலாளர் நலத்துறையின் சார்பில், 11 நபர்களுக்கு ரூ.13,30,000 /-, மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 




இக்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, விதவை உதவித்தொகை, கருணை அடிப்படையில் வேலை, மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், விலையில்லா தையல் இயந்திரம், ஆக்கிரமிப்பு மற்றும் காவல் துறை நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் என மொத்தம் 230 மனுக்கள் வரப்பெற்றன. பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பெற்று உரிய துறை அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுத்திட உத்தரவிட்டார். 



இன்றைய தினம், மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் தொழிலாளர் நலத்துறையின் சார்பில், 1 நபர்களுக்கு விபத்து மரண நிவாரண நிதியுதவி தலா ரூ.2,05,000/- அரசு மருத்துவ கல்லுாரிகளில் மருத்துவ பயிலும் 3 பயனாளிகளுக்கு ரூ.2,00,000/- கல்வி உதவித்தொகையும்  என ரூ.4,05,000/- அந்தியூர், முனியம்பாளையம் பகுதியில்   மீட்கப்பட்ட  6 கொத்தடிமைத் தொழிலாளர்களுக்கு ரூ.8,80,000/- தனியார் நிறுவனத்தில்  குழந்தை தொழிலாளியாக பணியாற்றிய 1 நபருக்கு ரூ.45,000/- என மொத்தம் ரூ. ரூ.13,30,000/- மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.



இக்கூட்டத்தில், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) செல்வராஜ், தொழிலாளர் உதவி ஆணையர் ஜெயலட்சுமி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முரளி  உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.