ஈரோடு மாவட்டம், சித்தோடு அரசினர் மகளிர் உயர்நிலைப்பள்ளில் நேற்று (10.01.2026) பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்ட தேர்வு நடைபெற்றதை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு நடுநிலைப்பள்ளியில் பயிலும் 8- ம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கு தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வுகள் 27 தேர்வு மையங்களில் தேர்வுகள் நடைபெற்றது.
இன்றைய தினம், ஈரோடு மாவட்டத்தில் மட்டும் இந்த தேர்வில் 6,662 விண்ணப்பதாரர்களுக்கு தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் 6,529 விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுதினார்கள். இதில் 133 விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத வருகை தரவில்லை. தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவி தொகை தேர்விற்கு 98 சதவீதம் மாணவ மாணவியர்கள் இத்தேர்வினை எழுதினார்கள். இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ மாணவியர்களுக்கு மாதம் ரூ.1000 வீதம் உதவித்தொகையாக அவர்கள் மேல்நிலை (12 -ம் வகுப்பு) வகுப்பு முடிக்கும் வரை வழங்கப்படவுள்ளது.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், சித்தோடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் இயங்கும் நியாயவிலைக்கடையில் குடும்ப அட்டைதார்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்கம் ரூ.3000 வழங்கப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதனைத்தொடர்ந்து, 099- மேற்கு சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட பெரிய சேமூர் ஈ.பி.பி.நகர், கிராம நிர்வாக அலுவலகத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் 2026 தொடர்பான உதவி வாக்காளர் பதிவு அலுவலரின் விசாரணை நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மான்விழி, ஈரோடு வருவாய் வட்டாட்சியர் முத்துகிருஷ்ணன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
%20(1).jpg)
%20(1).jpeg)
%20(1).jpeg)
.jpeg)
.jpeg)
%20(1).jpeg)