Type Here to Get Search Results !

ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு.....


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஈரோடு மாநகராட்சி மக்கள் தங்களது வீடுகளை சுத்தம் செய்யும் போது தேவையற்ற மக்கும் மற்றும் மக்காத கழிவுகளை சாலைகளின் ஓரத்திலோ, காலி மனைகளிலோ கொட்டாமல் தங்கள் வார்டு பகுதிக்கு வரும் தூய்மை பணியாளரிடம் வழங்கிடவும், மக்காத திடக்கழிவுகளில் மறுசுழற்சிக்கு பயன்படும் பொருட்களான பழைய துணி, பழைய காலணிகள், பயன்படுத்த இயலாத பிளாஸ்டிக் பொருட்கள், பழைய இரும்பு பொருட்கள், பழைய மின்னணு சாதனங்கள் மற்றும் பழைய பயன்படுத்த இயலாத மரச்சாமான்கள் ஆகியவற்றை  தனியாக சேகரித்து தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாநகராட்சி அனுமதி பெற்ற பழைய பொருட்கள் சேகரிக்கும் மையங்களில் வழங்குமாறும், இதற்காக மாநகராட்சி சார்பில் 10-ம் தேதி முதல் வருகிற 14-ந்தேதி வரை குப்பைகளை சேகரிக்க சிறப்பு வாகனங்கள் இயக்கப்படுவதை பயன்படுத்துமாறும், குப்பைகளை தரம் பிரித்து வழங்கி புகையில்லா போகி கொண்டாட பொதுமக்களை மாநகராட்சி நிர்வாகம் கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

ஈரோடு மாநகராட்சி சார்பில் மாநகரப்பகுதிகளில் வரும் 14ஆம் தேதி நடைபெறும் சமத்துவ பொங்கல் விழாவில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு  ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.





Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.