மாண்புமிகு வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள் "உலகம் உங்கள் கையில்" திட்டத்தின் கீழ் அரசினர் தொழில்பயிற்சி நிலையம் மற்றும் ஈரோடு கலை மற்றும் அறிவியியல் கல்லூரிகளை சேர்ந்த 1352 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார்.
ஈரோடு மாவட்டம். சென்னிமலை ரோடு, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அரசினர் தொழில்பயிற்சி நிலையம் மற்றும் ரங்கம்பாளையம், ஈரோடு கலை மற்றும் அறிவியியல் கல்லூரி ஆகிய பகுதிகளில் நடைபெற்ற விழாவில் கடந்த (12.01.2026) மாண்புமிகு வீட்டுவசதி. மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள் 1352 கல்லூரி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார்.
மாண்புமிகு வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் அவர்கள் பேசும்போது தெரிவித்தாவது
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சிபொறுப்பேற்ற பிறகு மாணவ, மாணவியர்களின் நலனுக்காக பல்வேறு சிறப்பு வாய்ந்த திட்டங்களை செயல்படுத்தி தமிழ்நாட்டினை முன் மாதிரி மாநிலமாக உயர்த்தி உள்ளார்கள். அந்த வகையில் உலகம் உங்கள் கையில் திட்டத்தில் கீழ் 10 லட்சம் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தை 08.01.2026 அன்று சென்னையில் துவக்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் மாணவ மாணவியர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படுகிறது.
இம்மடிக்கணினியானது அவர்களின் கல்விக்கு பயன்படும் வகையில் இருக்கும். மேலும் உயர்கல்வி செல்லும் மாணவியர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் மற்றும் தமிழ்புதல்வன் திட்டங்களை சிறப்புடன் செயல்படுத்தி வருகிறார்கள் என தெரிவித்தார்.
இன்றைய தினம். மாண்புமிகு வீட்டுவசதி. மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் அவர்கள் ஈரோடு மாவட்டத்திற்கு மடிக்கணினிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் அரசினர் தொழில்பயிற்சி நிலையத்தில் இறுதி ஆண்டு பயிலும் 307 மாணவ மாணவியர்களுக்கும். ஈரோடு கலை மற்றும் அறிவியியல் கல்லுாரி இறுதி ஆண்டு பயிலும் 1045 என மொத்தம் 1352 விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார்.
முன்னதாக, மாண்புமிகு வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் அவர்கள் அரசினர் தொழில்பயிற்சி நிலையத்தில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு கபாடி, டென்னிஸ், போட்டிகளை துவக்கி வைத்து, விளையாட்டு போட்டியில் கலந்து கொண்ட மாணவ மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சிகளில், மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர்.ப.செல்வராஜ், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் வி.சி.சந்திரகுமார், ஈரோடு மாநகராட்சி மேயர் சு.நாகரத்தினம் சுப்பிரமணியம், அரசினர் தொழில்பயிற்சி நிலைய முதல்வர் சீனிவாசன், ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் சங்கர சுப்பிரமணியன், உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
%20(1).jpg)
%20(1).jpg)
%20(1).jpg)
%20(1).jpg)
%20(1).jpg)
%20(1).jpg)
.jpeg)
%20(1).jpg)
%20(1).jpg)
%20(1).jpg)
%20(1).jpg)