ஈரோடு மாவட்டம், சென்னிமலை, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று (02.01.2026) தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய பணிகள் குறித்து அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம். மாண்புமிகு தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பிற மாநிலங்கள் பின்பற்றுகின்ற வகையில் எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக முதலமைச்சரின் காலை உணவு திட்டம், அன்புக்கரங்கள் திட்டம், கட்டணமில்லா பேருந்து பயணம், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, வரும்முன் காப்போம், நம்மைக் காக்கும் 48, மக்களைத் தேடி மருத்துவம் என பல்வேறு திட்டங்கள் என அனைவரும் பயன்பெறும் வகையில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்தில் 434 கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
காங்கேயம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 151 மேல்நிலை தொட்டிகளுக்கு 148 பகிர்மான குழாய்கள் வழங்கும் பணி நிறைவடைந்துள்ளது. மேலும், பகிர்மானக் குழாய்கள் பதிக்கும் பணிகள் மேற்கொள்ளும் போது எதிர்கொள்ளும் இடர்பாடுகளை உடனடியாக களைந்து பொது மக்களுக்கு 434 காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்க தகுந்த ஏற்பாடுகளை செய்து தர வேண்டும் என தெரிவித்தார்.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் முடிக்கப்பட வேண்டிய பணிகளையும் ஊராட்சிகள் விரைந்து முடிக்கும் படி அறிவுறுத்தினார்.
மேல்நிலை தொட்டிகளுக்கு ஏற்றப்படும் நீரின் அளவு குறித்தும், விநியோகம் செய்யப்படும் அளவு குறித்தும் அறிக்கை சமர்பிக்கப்பட்டது. முழுமையாக பணிகள் அனைத்தையும் முடித்து முழு அளவு நீரேற்றம் செய்து சீரான குடிநீர் விநியோகத்தினை விரைந்து வழங்குமாறு தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி, திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) பிரியா, மேற்பார்வை பொறியாளர் (த.கு.வ.வா) விநாயகம் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.
%20(1).jpg)
.jpg)
.jpg)
%20(1).jpg)
%20(1).jpg)
.jpg)
.jpg)