ஈரோடு மாவட்டம், பெருந்துறை பகுதியில் மாண்புமிகு வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள் நேற்று (02.01.2026) ரூ.49.54 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட வேளாண் விளைபொருள் விற்பனை மையம், 2 பகுதி நேர மற்றும் 1 முழு நேர நியாயவிலைக்கடை கட்டிடங்களை திறந்து வைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்கினார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு சிறப்பு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் இன்றைய தினம், ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம், புங்கம்பாடி ஊராட்சி பாரவலசு கிராமம், பெருந்துறை ஆர்.எஸ். தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் செயல்படும் முழு நேர நியாய விலைக் கடையான புங்கம்பாடி (DHBPIOSPN) நியாய விலைக் கடையில் 1,254 குடும்ப அட்டைகளுடன் செயல்பட்டு வந்தது. இக்கடையிலிருந்து பொருட்களை பெற்று வந்த பாரவலசு பகுதி மக்கள் புங்கம்பாடி நியாய விலைக்கடையிலிருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் பயணம் சென்று அத்தியாவசிய பொருட்களை பெற்று வந்தனர். இப்பகுதி மக்கள் பயண துாரத்தை குறைத்து தங்கள் பகுதியில் புதிய பகுதி நேர நியாய விலைக்கடை அமைத்து தர வேண்டும் என மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்களிடம் கோரிக்கை வைத்ததன் பேரில் இன்று சுமார் 250 குடும்ப அட்டைகள் கொண்ட ஒரு பகுதி நேர நியாய விலைக் கடையினை திறத்து வைத்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். இக்கடையானது பிரதிவாரம் செவ்வாய்கிழமை செயல்படவுள்ளது.
தொடர்ந்து உருமாண்டம்பாளையம், பெருந்துறை ஆர்.எஸ். தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் லிட் சார்பில் செயல்படும் முழு நேர நியாய விலைக் கடையானது பெருந்துறை ஆர்.எஸ். நியாய விலைக் கடையில் 1,214 குடும்ப அட்டைகள் உடன் செயல்பட்டு வருகிறது. இந்நியாய விலைக் கடையின் பகுதி நேர 150 குடும்ப அட்டைகள் கொண்டு உருமாண்டம்பாளையத்தில் செயல்பட்டு வருகிறது. இக்கடை பிரதிவாரம் செவ்வாய் கிழமை செயல்பட்டு வருகிறது. இப்பகுதிநேர நியாய விலைக் கடையின் புதிய கட்டிடத்தினை திறந்து வைத்தார்.
மேலும், மொடக்குறிச்சி வட்டம். கனகபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் முழு நேர நியாய விலைக் கடையானது கனகபுரம் நியாய விலைக் கடையில் 1,316 குடும்ப அட்டைகள் செயல்பட்டு வருகிறது. இந்த நியாய விலைக் கடையில் பொருட்களை பெற்று வந்த ஜீவாநகர் பகுதி மக்கள் கனகபுரம் நியாய விலைக்கடையிலிருந்து சுமார் 1.5 கிலோ மீட்டர் தூரம் பயணம் சென்று அத்தியாவசிய பொருட்களை பெற்று வந்தனர். இக்கடையின் மூலம் சுமார் 603 குடும்பஅட்டைதார்கள் பயன் பெறுவார்கள். இக்கடை அனைத்து வேலை நாட்களிலும் செயல்படும்.
ஈரோடு மாவட்டத்தில் 913 முழுநேரம் மற்றும் 340 பகுதி நேரம் என மொத்தம் 1253 நியாய விலைக்கடைகள் உள்ளது. இதன் மூலம் 7.64 இலட்சம் குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெற்று வருகிறார்கள்.
இன்றைய தினம், மாண்புமிகு வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள் பெருந்துறை, தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் பல்நோக்கு சேவை மைய திட்டத்தின் கீழ் ரூ.49.54 இலட்சம் மதிப்பீட்டில் வேளான் விளைபொருள் விற்பனை மையம் கட்டி முடிக்கப்பட்டதை திறந்து வைத்து, ஸ்ரீஅப்பத்தாள் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரூ.10,50,000/- மதிப்பீட்டில் கடன் உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சிகளில் ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் வி.சி.சந்திரகுமார், மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சி.சரஸ்வதி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கந்தராஜா உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
%20(1).jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)