(தாட்கோ) மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்த
இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்பட்டு
வருகிறது. இதன் அடிப்படையில் தற்போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு அமேசான் வலை சேவைகள் மறுதொடக்கம் – செயற்கை நுண்ணறிவு (Amazon Web Services re/Start – AI Programmer) பயிற்சி
வழங்கப்படவுள்ளது.
இப்பயிற்சியில் சேர ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை
சார்ந்தவர்களாகவும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3.00 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும். 18 முதல் 30 வயது வரை உள்ளவர்களாகவும், ஏதேனும் பட்டப்படிப்பு முடித்த இளைஞர்கள் இப்பயிற்சியில் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியினை முழுமையாக முடிக்கும் இளைஞர்களுக்கு பயிற்சி சான்றிதழ் மற்றும் தகுதியுள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பிற்கு வழிவகை செய்யப்படும்.
இப்பயிற்சியினை பெற தாட்கோ இணையதளமான (www.tahdco.com) என்ற
முகவரியில் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சிக்கான கால அளவு 2 மாதம் ஆகும்.
மேலும் சென்னையில் உள்ள விடுதியில் தங்கி படிக்கும் வசதி மற்றும் உணவுக்கான செலவினம் தாட்கோ மூலமாக வழங்கப்படும்.
மேலும் விபரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகம், 6வது தளம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஈரோடு. தொலைபேசி எண்– 0424-2259453
அணுகவும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
%20(1).jpg)