Type Here to Get Search Results !

ஈரோடு செம்மாம்பளையம், மஞ்சள் வணிக வளாகத்தில் - வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி......


ஈரோடு மாவட்டம் செம்மாம்பளையம், மஞ்சள் வணிக வளாகத்தில் இன்று (27.03.2026) மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி அவர்கள் தலைமையில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு ”வாக்களிப்பது உங்கள் உரிமை மற்றும் கடமை” வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.


மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர்அவர்கள் பேசும்போது தெரிவித்ததாவது,

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 23.04.2026 அன்று நடைபெறவுள்ளது என (15.03.2026) அன்று அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய தினம் மஞ்சள் வணிக வளாகத்தில் நடைபெற்றது. கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் ஈரோடு மாவட்டம் முழுவதும் கணக்கெடுப்பின் படி சுமார் 76 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றது. எனவே, அனைத்து தரப்பு மக்களுக்கும் வாக்களிக்கும் வகையில் இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில் 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களின் வீட்டிற்கே சென்று வாக்குப்பதிவை பதிவு செய்திடவும். மேலும் தேர்தல் நேரத்தில் பணிபுரியும் அலுவலர்களுக்கு தபால் மூலம் வாக்களிக்கவும், பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள், காவல் துறை சார்ந்த அலுவலர்கள் என அனைத்து பொதுமக்களும் வாக்களிக்கவும் இத்தகைய நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதியிலும் தேர்தலுக்கான அனைத்து முன்னேற்பாடு பணிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. ஈரோடு மாவட்டம் முழுவதும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக பொதுமக்கள், வணிகர்கள், தொழிலாளர்கள், தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் என அனைத்து தரப்பு வாக்காளர்களுக்கும் இந்த தேர்தல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.  எனவே தங்களுடைய ஒத்துழைப்பை நல்கி தேர்தல் நாளன்று 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என தெரிவித்தார்.


ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்,  மஞ்சள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட”மஞ்சள் மாநகரம்” ”100 சதவீதம் வாக்காளிப்போம்” என்ற வாசகங்கள் அடங்கியதை பார்வையிட்டார். 


ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்திடும் வகையில் மஞ்சளால் உருவாக்கப்பட்ட கை விரல் மை  முன்பாக  நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும், 100 சதவீதம் வாக்களிக்கும் வகையில் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினார். 

 


இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை .பிரியா, வேளாண்மை இணை இயக்குநர்  சிவக்குமார், மாவட்ட ஆட்சியரின் வேளாண்மை நேர்முக உதவியாளர் லோகநாதன்,  ஈரோடு விற்பனைக்குழு செயலாளர் கலைச்செல்வி, துணை  வேளாண்மைஇயக்குநர் மாரிமுத்து, மஞ்சள் வணிக வளாக நிர்வாகிகள், விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.






Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.