Type Here to Get Search Results !

இராட்சத பலூனை வானில் பறக்கவிட்டு தேர்தல் விழிப்புணர்வு....




ஈரோடு மாநகராட்சி, மத்திய பேருந்து நிலையம் வணிக வளாகம் மேல்தளத்தில் இன்று (30.03.2026) மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி அவர்கள் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, 18 வயது பூர்த்தியான வாக்காளர்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்திடும் வகையில் இராட்சத பலூனை வானில் பறக்கவிட்டு வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.




இந்திய தேர்தல் ஆணையம், வாக்காளர்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர் / ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்காளர்களாக பதிவு செய்ய வேண்டும், வாக்காளர்கள் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், கையெழுத்து இயக்கம், செல்பி பாய்ண்ட் மூலமாகவும் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மிகப் பிரம்மாண்டமான அளவில் கோலங்கள் வரைந்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.




அதன் தொடர்ச்சியாக, இன்றைய தினம் (30.03.2026) மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஈரோடு மத்திய பேருந்து நிலையம் வணிக வளாகம் மேல்தளத்தில்  ”வாருங்கள் 100 சதவீதம் வாக்களிப்போம்”, ”என் வாக்கு என் உரிமை” என்ற வாசகங்கள் எழுதப்பட்டிருந்த 10 அடி சுற்றளவு மற்றும் 10 அடி உயரம் கொண்ட ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட இராட்சத பலூனை வானில் 150 அடி உயரத்தில் பறக்க விட்டு வாக்காளர்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தினார்.

இந்நிகழ்வுகளில் ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் .அர்பித் ஜெயின் , திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை .பிரியா, மாவட்ட சுற்றுச்சூழல் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்பொறியாளர்  ராஜ்குமார், உதவி மண்டலம்-1 ஆணையாளர் மோகனசுந்தரி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.






Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.