ஈரோடு மாவட்டம் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 -ஐ முன்னிட்டு “வாக்காளர்களுக்கான ECINET Mobile App” பயன்பாடு குறித்து விழிப்புணர்வு செய்தி குறிப்பு.
ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர்
அவர்கள் அறிவித்திருப்பதாவது
எதிர்வரும் 23.04.2026 அன்று நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 பணிகள் சுமூகமாகவும், நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுவதை உறுதி செய்யும் பொருட்டு, இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின் கீழ் தேர்தல் செயல்பாட்டில் குடிமக்கள் ஈடுபாடு மற்றும் பங்கேற்பை உறுதி செய்ய “ECINET Mobile App” உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த செயலி குடிமக்கள், வேட்பாளர்கள்/அரசியல் கட்சிகள் மற்றும் தேர்தல் அதிகாரிகளை தடையின்றி இணைக்கிறது, அனைத்து முக்கிய தேர்தல் சேவைகளையும் ஒரே பாதுகாப்பான மேடையில் வழங்குகிறது. Google Play Store / iOS app store ஆகிய தலங்களில் அனைத்து குடிமக்களுக்கும் பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம்..jpg)
மற்றும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 08 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெறும் தேர்தல் விதிமுறை(MCC) / செலவு விதி மீறல்களை இணைய வழி மூலம் புகாரளிக்க சி-விஜில் செயலி இந்த ECINETஇந்த செயலியின் உள்ளே உள்ளது . சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை நடத்துவதில் ஒரு செயலூக்கமான மற்றும் பொறுப்பான பங்கு வகிக்கக்கூடிய நம் நாட்டின் விழிப்புணர்வுள்ள குடிமக்களையும் ஈடுபடுத்த இது வழிவகை செய்கிறது.
மேற்குறிப்பிட்டுள்ள செயலிகள் அனைத்தும், தற்போது ECINET என்ற ஒரே செயலிவாயிலாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் இச்செயலியை பதிவிறக்கம் செய்து தேர்தல் தொடர்பான சேவைகளை பயன்படுத்திக்கொள்ளலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.
.jpg)