ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட்டம், அரச்சலூர் உள்வட்டம், அட்டவணை அனுமன்பள்ளி கிராமத்தில் உள்ள கொங்கு மஹால் மண்டபத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் 22.07.2026 (புதன்கிழமை) முற்பகல் 10.00 மணிக்கு மக்கள் தொடர்பு திட்டம் முகாம் (MCP) நடைபெற உள்ளது.
அரசு மாதந்தோறும் நடத்தி வரும் மக்கள் தொடர்பு திட்டம் முகாம், ஈரோடு மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படும் ஊராட்சிகளில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன்படி, ஜூலை 2026-ஆம் மாதத்திற்கான மனு நீதி நாள் முகாம் மொடக்குறிச்சி வட்டம், அரச்சலூர் உள்வட்டம், அட்டவணை அனுமன்பள்ளி கிராமத்தில் நடைபெறுகிறது.
இம்முகாமில் அனைத்து துறை அலுவலர்களும், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொள்ள உள்ளனர். பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
%20(2).jpg)