உலக தாய்ப்பால் வாரம்–2026-ஐ முன்னிட்டு ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி 05.08.2026 இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ஆகஸ்ட் 1 முதல் 7 வரை உலக தாய்ப்பால் வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. குழந்தையின் வாழ்நாளின் முதல் 1,000 நாட்கள் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானவை என்பதால், பிறந்த முதல் அரை மணி நேரத்திற்குள் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்றும், முதல் 6 மாதங்கள் முழுவதும் தாய்ப்பால் மட்டுமே வழங்க வேண்டும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், 6 மாதங்களுக்குப் பிறகு இணை உணவுடன் 2 வயது வரை தாய்ப்பால் தொடர வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
தாய்ப்பால் குழந்தையின் ஊட்டச்சத்து, உடல் மெலிவைத் தடுப்பது, எடை குறைபாடு மற்றும் இறப்பு விகிதத்தைக் குறைப்பது உள்ளிட்ட பல்வேறு நன்மைகளை வழங்குவதாகவும், தாய்மார்களின் உடல்நலத்திற்கும் பயனுள்ளதாகவும் நிகழ்ச்சியில் எடுத்துரைக்கப்பட்டது.
இந்த விழிப்புணர்வு பேரணியில் 200-க்கும் மேற்பட்ட செவிலியர் கல்லூரி மாணவியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதாகைகளை ஏந்திச் சென்றனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் மரு. வெங்கடேசன், அரசு துறை அலுவலர்கள், செவிலியர் கல்லூரி மாணவியர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
%20(2)%20(1).jpg)
.jpg)
.jpeg)
.jpg)