ஈரோடு மாவட்டம், ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வேப்பம்பாளையம், பிச்சாண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி 06.08.2026 இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
வேப்பம்பாளையம் நியாய விலைக் கடையில் பொதுமக்களின் இருப்பு, விற்பனை விவரம் மற்றும் பயனாளர்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்கள் குறித்து ஆய்வு செய்த அவர், தினசரி நியாய விலைக் கடை செயல்பாடு மற்றும் விடுமுறை நாட்களில் விநியோக நடைமுறைகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து, ஒருங்கிணைந்த குழந்தைகள் மையத்தில் குழந்தைகளின் எண்ணிக்கை, வருகைப் பதிவு, எடை, உயரம், ஊட்டச்சத்து உணவு, பராமரிப்பு பதிவேடுகள் உள்ளிட்ட விவரங்களை ஆய்வு செய்து, மேலும் அங்கு பயிலும் குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினார்.
வேப்பம்பாளையம் ஊராட்சியில் ₹14.96 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நூற்றாண்டு பண்ணையினை பார்வையிட்ட ஆட்சித்தலைவர், அதன் பராமரிப்பு மற்றும் பயன்பாடு குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் பள்ளி வளாகத்தில் மாணவர்களின் வருகை, பாடங்கள் நடத்தும் முறை, புத்தக வாசிப்பு உள்ளிட்ட கல்விச் செயல்பாடுகளையும் ஆய்வு செய்தார்.
பிச்சாண்டம்பாளையம் ஊராட்சி மற்றும் புதூர் பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள், சாக்கடை கால்வாய், பராமரிப்புப் பணிகள், ஊரக வளர்ச்சித் திட்டங்கள் ஆகியவற்றை பார்வையிட்டு பணிகளை தரமாகவும், காலதாமதமின்றியும் நிறைவேற்றுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.சாகுபடி செய்து வரும் விவசாயியின் காய்கறித் தோட்டத்தை பார்வையிட்டு, சாகுபடி பரப்பளவு, உற்பத்தி, வருவாய் மற்றும் விவசாய வளர்ச்சி தொடர்பான விவரங்களை கேட்டறிந்தார்.மேலும் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை குறித்த காலத்திற்குள் விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், கதிரம்பட்டி நஞ்சனாபுரம் பகுதியில் சாதனா மகளிர் சுய உதவி குழுவினர்களால் உற்பத்தி செய்யப்படும் சிப்பி காளான் வளர்ப்பு நிலையத்தினை பார்வையிட்டு வளர்ப்பு முறைகள் உற்பத்தி அளவு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் பராமரிப்பு முறைகள் மற்றும் விற்பனை குறித்தும் மகளிர் சுய உதவி குழுவினர்களிடம் கேட்டறிந்தார்.
ஆய்வின்போது ஈரோடு வட்டாட்சியர் கவிதா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கமணி, லதா, செயற்பொறியாளர்கள் ராகுல், சிவகுமார் உள்ளிட்ட துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

.jpeg)
%20(1).jpeg)
.jpeg)
%20(1).jpeg)
%20(1).jpeg)
%20(1).jpeg)
.jpeg)
.jpeg)

%20(1).jpeg)