ஜப்பான் நாட்டின் Aichi நகரில் 2028-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள World Skills Competition 2028 போட்டியில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் திறமையான இளைஞர்களைத் தேர்வு செய்வதற்கான முக்கிய தளமாக இப்போட்டி அமைகிறது.
16 முதல் 25 வயது வரையிலான இளைஞர்கள், திறன் பிரிவைப் பொறுத்து வயது வரம்பில் மாற்றம் இருக்கலாம் என்ற அடிப்படையில், விண்ணப்பிக்கலாம். Engineering, Polytechnic, Arts & Science கல்லூரி மாணவர்கள், ITI மற்றும் திறன் பயிற்சி நிறுவனங்களின் மாணவர்கள் மற்றும் இளம் தொழில்முனைவோர்களும் பங்கேற்கலாம்.
Manufacturing & Engineering Technology, Information & Communication Technology, Construction & Building Technology, Transportation & Logistics, Creative Arts & Fashion, Social & Personal Services ஆகிய 6 முக்கியத் துறைகளின் கீழ் 60-க்கும் மேற்பட்ட தொழில் திறன் பிரிவுகளில் போட்டிகள் நடைபெற உள்ளன.
தமிழ்நாடு திறன் போட்டிகளில் தொடர்ந்து முன்னணி மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது. சமீபத்திய தேசிய அளவிலான போட்டிகளில் தமிழ்நாடு மேற்குமண்டல அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்ததுடன், தேசிய தரவரிசையில் இரண்டாம் இடம் பிடித்து மொத்தம் 46 பதக்கங்களை வென்றுள்ளது. மேலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 வெற்றியாளர்கள் சீனாவின் Shanghai நகரில் நடைபெறவுள்ள World Skills Competition 2026-ல் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தத் தேர்வாகியுள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான இளைஞர்கள் https://www.skillindiadigital.gov.in/india-skills-competition இணையதளம் மூலம் நேரடியாகப் பதிவு செய்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க 15.09.2026 கடைசி நாளாகும். மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள், தொழிற்பயிற்சி மையங்கள் மற்றும் தகுதியான இளைஞர்கள் அதிகளவில் பங்கேற்று தங்களது திறமையை உலக அளவில் வெளிப்படுத்துமாறு ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
%20(2)%20(1).jpg)