Type Here to Get Search Results !

ஈரோடு மாவட்டத்தில் 3 மாதங்களுக்கு உணவு நிறுவனங்களில் சிறப்பு ஆய்வு...


ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து உணவு சேவை நிறுவனங்களிலும் சுகாதாரம் மற்றும் உணவு தரத்தை உறுதி செய்வதற்காக கடந்த 01.09.2026 முதல் 30.11.2026 வரை மூன்று மாதங்களுக்கு சிறப்பு ஆய்வு (Special Drive) மேற்கொள்ளப்பட உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை ஆணையரின் உத்தரவின்படியும், மாவட்ட ஆட்சித்தலைவரின் வழிகாட்டுதலின்படியும் இந்த ஆய்வு நடைபெறுகிறது.

இதன்படி, ஈரோடு மாவட்டத்தில் இயங்கி வரும் உணவகங்கள் (Restaurants/Hotels), உணவுக்கூடங்கள், விடுதிகள், சிற்றுண்டிச் சாலைகள் (Canteens), சுபகாரிய சமையல் அமைப்பாளர்கள் (Caterers), தெருவோர உணவு வியாபாரிகள் (Hawkers), தேநீர் கடைகள் மற்றும் சிறிய ரக திண்பண்டக் கடைகள் உள்ளிட்ட அனைத்து Food Business Operators நிறுவனங்களிலும் தீவிர ஆய்வு மேற்கொள்ளப்படும்.

அனைத்து உணவு வணிகர்களும் செல்லுபடியாகும் FSSAI License அல்லது Registration Certificate பெற்றிருக்க வேண்டும். உரிமம் பெறாமல் செயல்படும் நிறுவனங்கள் மீது சட்டம் பிரிவு 63-ன் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும்.

உணவு வணிகர்கள் Inspection Checklist-ஐ பதிவிறக்கம் செய்து, தங்களது நிறுவனங்களில் சுய தணிக்கை மேற்கொண்டு குறைபாடுகளை முன்கூட்டியே நிவர்த்தி செய்ய வேண்டும். உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்ளும்போது Self Audit Report வைத்திருக்க வேண்டும்.

சமையலறைகள், உணவு சேமிப்பு பகுதிகள், Deep Freezers/Refrigerators, மேஜைகள் மற்றும் சுவர்கள் தூய்மையாகவும், எண்ணெய் மற்றும் பிசுக்குகள் இல்லாமலும் பராமரிக்கப்பட வேண்டும். Pest Control நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ளப்பட்டு அதற்கான ஆவணங்களும் பராமரிக்கப்பட வேண்டும்.

உணவு கையாளும் அனைத்து பணியாளர்களும் Medical Fitness Certificate மற்றும் FOSTAC (Food Safety Training and Certification) சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும், பணியாளர்கள் Head Cover, Gloves, Face Mask மற்றும் சுத்தமான Apron அணிந்து பணியாற்ற வேண்டும்.

பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயை மீண்டும் பயன்படுத்தக் கூடாது. அதனை FSSAI-ஆல் அங்கீகரிக்கப்பட்ட RUCO முகவர்களிடம் ஒப்படைத்து அதற்கான பதிவேடுகளை பராமரிக்க வேண்டும். செயற்கை நிறமிகள் மற்றும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது. செய்தித்தாள் போன்ற மையிட்ட காகிதங்களை உணவுப் பொருட்கள் பொட்டலமிட பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சமையலறைகளில் தரமான மற்றும் துருப்பிடிக்காத கத்திகள் மற்றும் வெட்டுக் கருவிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆய்வின்போது உணவு பாதுகாப்பு விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு Food Safety and Standards Act, 2006-ன் கீழ் உடனடி Improvement Notice வழங்கப்படும். மேலும், அபராதம் விதிக்கப்படுவதுடன் சட்டப்பூர்வ வழக்கு தொடரப்பட்டு, நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மாவட்ட நியமன அலுவலர் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு, மாநில உரிமம் பெற்ற நிறுவனங்கள் மட்டுமின்றி மத்திய FSSAI உரிமம் பெற்ற உணவு நிறுவனங்களிலும் ஆய்வு மேற்கொள்ள மத்திய மற்றும் மாநில அரசுகளால் முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.