Type Here to Get Search Results !

23 மையங்களில் 27.09.2026 அன்று TNPSC Group I தேர்வு - கலெக்டர் அறிவிப்பு...




தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு I (தொகுதி I பணிகள்) பதவிகளுக்கான முதல்நிலைத்தேர்வு (Preliminary Examination) வரும் 27.09.2026 அன்று முற்பகல் நடைபெற உள்ளது என ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.

ஈரோடு வட்டத்தில் 23 தேர்வுக் கூடங்களில் நடைபெறவுள்ள இத்தேர்வை மாவட்டத்தில் 6,837 தேர்வர்கள் எழுத உள்ளனர். தேர்வு காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெறும்.

தேர்வு நாளன்று காலை 8.30 மணி முதல் 9.00 மணி வரை தேர்வர்கள் தேர்வுக்கூடத்திற்குள் அனுமதிக்கப்படுவர். காலை 9.00 மணிக்கு தேர்வுக்கூட நுழைவாயில் மூடப்படும். அதன்பிறகு வரும் தேர்வர்கள் எக்காரணம் கொண்டும் தேர்வுக்கூடத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

எனவே, தேர்வு எழுதும் தேர்வர்கள் உரிய நேரத்திற்குள் தேர்வுக்கூடத்திற்கு செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், தேர்வுப் பணிகளை கண்காணிக்க 5 நடமாடும் குழுக்கள் மற்றும் 23 ஆய்வு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு மையங்களில் தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முழு அளவில் செய்யப்பட்டுள்ளதாக  கலெக்டர் தகவல்  தெரிவித்துள்ளார்.




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.