சென்னிமலை 110/11 KV துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி 24.09.2026 வியாழக்கிழமை நடைபெற உள்ளது.
இதன் காரணமாக பெருந்துறை கோட்டத்தைச் சேர்ந்த சென்னிமலை நகரப் பகுதி முழுவதும், பூங்கா நகர், ஊத்துக்குளி ரோடு, குமராபுரி, சக்தி நகர், பெரியார் நகர், நாமக்கல் பாளையம், அரச்சலூர் ரோடு, குப்பிச்சிபாளையம், திப்பம்பாளையம், அம்மாபாளையம், அசோகபுரம், புதுப்பாளையம், இராமலிங்கபுரம், ஒரத்துப்பாளையம், அய்யம்பாளையம், கொடுமணல், சென்னிமலைபாளையம், வெப்பிலி, மு.க.வலசு, பசுவப்பட்டி மற்றும் முருங்கத்தொழுவு ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.
மேற்கண்ட பகுதிகளில் காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
%20(1).jpg)