Type Here to Get Search Results !

ஓய்வூதிய பயனாளிகளுக்கு முக்கிய அறிவிப்பு – Aadhaar-ஐ வங்கிக் கணக்குடன் இணைக்க அறிவுறுத்தல்...


ஈரோடு மாவட்டத்தில் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் முதியோர் ஓய்வூதியம் மற்றும் இதர ஓய்வூதியத் திட்டங்களில் உதவித்தொகை பெறும் பயனாளிகளுக்கு, இந்திய அரசின் அறிவுறுத்தலின்படி செப்டம்பர் 2026 முதல் Aadhaar அடிப்படையிலான பணப்பரிவர்த்தனை முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, பயனாளிகளுக்கான நிதியுதவி அவர்களின் Aadhaar எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். அனைத்து பயனாளிகளுக்கும் நிதியுதவி தடையின்றி சென்றடைவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வங்கிக் கணக்குடன் இதுவரை Aadhaar எண்ணை இணைக்காத பயனாளிகள், தங்களது வங்கியை அணுகி Aadhaar இணைப்பை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக சந்தேகம் அல்லது உதவி தேவைப்படும் பயனாளிகள், ஈரோடு மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள தனித் துணை ஆட்சியர் (ச.பா.தி) அலுவலகம் மற்றும் ஒவ்வொரு வட்டாட்சியர் அலுவலகத்திலும் உள்ள தனி வட்டாட்சியர் (ச.பா.தி) அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையங்களை அணுகலாம். அங்கு தேவையான வழிகாட்டுதலும் உதவியும் வழங்கப்படும்.


ஒவ்வொரு பயனாளிக்கும் நிதியுதவி எவ்வித இடையூறும் இன்றி சீராக சென்றடைவதை உறுதி செய்வதில் அரசு உறுதியாக உள்ளதாக ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.