ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVMs) மற்றும் VVPAT இயந்திரங்கள் பாதுகாப்பாக பராமரிக்கப்பட்டு வருவதை 08.09.2026 இன்று காலாண்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர இருப்புக்கிடங்கில் நடைபெற்ற இந்த ஆய்வின்போது, கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள EVMs, VVPAT இயந்திரங்கள் மற்றும் அவற்றின் இருப்பு விவரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டார்.
மேலும், இயந்திரங்கள் முறையாகவும் பாதுகாப்பாகவும் வைக்கப்பட்டுள்ளனவா, அவற்றின் இருப்பு தொடர்பான பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்பட்டு வருகின்றனவா என்பதையும் ஆய்வு செய்தார். தொடர்ந்து, EVM மற்றும் VVPAT இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கிடங்கின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் CCTV கண்காணிப்பு கேமரா அறை உள்ளிட்டவற்றையும் பார்வையிட்டார்.
தேர்தல் பணிகளுக்காக பயன்படுத்தப்படும் EVMs மற்றும் VVPAT இயந்திரங்கள் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களின்படி பாதுகாப்பாகவும், முறையான கண்காணிப்புடனும் பராமரிக்கப்பட்டு வருவதை உறுதி செய்யும் வகையில் இந்த காலாண்டு ஆய்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வின்போது, ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் முத்துசாமி, தேர்தல் வட்டாட்சியர் சண்முகசுந்தரம் உட்பட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப்பிரதிநிதிகள், தொடர்புடைய அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
%20(2)%20(2).jpg)
.jpeg)
%20(1).jpeg)