ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார் அவர்கள் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை, ஆதார் கார்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தார்சாலை, மகளிர் உரிமைத்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்விக்கடன், தொழில் கடன், குடிநீர் வசதி, சாலை வசதி, அடிப்படை வசதிகள் மேம்பாடு, இலவச வீட்டுமனை பட்டா, தனிப்பட்டா மாறுதல், மின்னணு குடும்ப அட்டை, மின் இணைப்பு, தெரு விளக்கு, ஆக்கிரமிப்பு மற்றும் காவல் துறை நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 320 மனுக்கள் பெறப்பட்டன.
பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் பெற்று, அவற்றை உரிய துறை அலுவலர்களிடம் வழங்கி, மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தில், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) ரமேஷ், மாவட்ட வழங்கல் அலுவலர் திருமதி.மகேஸ்வரி மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
%20(1).jpeg)
%20(1).jpeg)
.jpeg)
.jpeg)