Type Here to Get Search Results !

ஈரோடு நந்தா கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரியில்‌ 17 -ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

ஈரோடு நந்தா கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரியில்‌ 17-ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரி கலையரங்கில்‌ நடைபெற்றது.
இவ்விழாவில்‌ பாரதிதாசன்‌ பல்கழைக்கழகம்‌, திருச்சிராப்பள்ளி பேராசிரியர்‌ எம்‌.லட்சுமணன்‌ அவர்கள்‌ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு
789 மாணவ, மாணவியருக்குப்‌ பட்டங்கள்‌ வழங்கினார்‌. இவ்விழாவிற்கு ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின்‌ தலைவர்‌ வெ.சண்முகன்‌ அவர்கள்‌ தலைமை தாங்கினார்‌.
நந்தா கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரியின்‌ முதல்வர்‌ (பொறுப்பு) முனைவர்‌ பெ.ரம்யா அவர்கள்‌ வரவேற்புரை நிகழ்த்தினார்‌.
இப்பட்டமளிப்பு விழாவில்‌ இளங்கலை உயிர்‌ தொழில்‌ நுட்பவியலைச்‌ சார்ந்த 53 மாணவர்களும்‌, கணிதத்துறையைச்‌ சார்ந்த 60 மாணவர்களும்‌, வணிக மேலாண்மை துறையைச்‌ சார்ந்த 43 மாணவாகளும்‌, வணிகவியல்‌ கணிணிப்‌ பயன்பாட்டியல்‌ துறையைச்‌ சார்ந்த 103 மாணவர்களும்‌, வணிகவியல்‌ நிர்மனச்‌ செயல்பாட்டுத்‌ துறையைச்‌ சார்ந்த 33 மாணவர்களும்‌, கணிணிஅறிவியல்‌ துறையைச்‌ சார்ந்த 103 மாணவர்களும்‌, கணிணிப்‌ பயன்பாட்டியல்‌ துறையைச்‌ சார்ந்த 77 மாணவா்களும்‌, ஆடை வடிவமைப்புத்‌ துறையைச்‌ சார்ந்த 43 மாணவர்களும்‌, ஆங்கில இலக்கியத்‌ துறையைச்‌ சார்ந்த 105 மாணவர்களும்‌, வணிகவியல்‌ துறையைச்‌ சார்ந்த 52 மாணவர்களும்‌,
முதுகலை இயற்பியல்‌ துறையைச்‌ சார்ந்த 10 மாணவர்களும்‌, முதுகலை கணிதத்‌ துறையைச்‌ சார்ந்த 25 மாணவர்களும்‌, முதுகலை உயிர்‌ தொழில்‌ நுட்பவியலைச்‌ சார்ந்த 22 மாணவர்களும்‌, முதுகலை வணிகவியல்‌ கணிணி பயன்பாட்டியல்‌ சார்ந்த 49 மாணவாகளும்‌, முதுகலை ஆங்கில துறையைச்‌ சார்ந்த 11 மாணவ, மாணவியர்கள்‌ கலந்து கொண்டு பட்டம்‌ பெற்றனர்‌.
இதில்‌ பாரதியார்‌ பல்கலைகழகத்‌ தரவரிசையில்‌, இளங்கலை ஆங்கிலத்துறையைச்‌ சார்ந்த D. தாரணிபங்கையர்செல்வி என்ற மாணவி தங்கப்பதக்கம்‌ மற்றும்‌ முதல்‌ இடத்தையும்‌,
S.சுவாதி என்ற மாணவி இரண்டாம்‌ இடத்தையும்‌,
J.தேவசிகா ஏழாம்‌ இடத்தையும பெற்றனர்‌. இளங்கலை கணித பயன்பாட்டியல்துறை சார்ந்த மாணவி N. சரண்யா இரண்டாம்‌ இடத்தை பெற்றார்‌. இளங்கலை உயிர்‌ தொழிற்நுட்பவியல்‌ துறை மாணவி V.P.சிவரஞ்சனி ஆறாம்‌ இடத்தையும்‌, P.நிவேதா ஏழாம்‌ இடத்தையும்‌ பெற்றனர்‌. இளங்கலை வணிகவியல்‌ நிர்மனச்‌ செயல்பாட்டுத்‌ துறையைச்‌ சார்ந்த S.ஐஸ்வர்யா என்ற மாணவி இரண்டாம்‌ இடத்தை பெற்றார்‌. இளங்கலை ஆடை வடிவமைப்புத்‌ துறையைச்‌ சார்ந்த M. நாமதா என்ற மாணவி நான்காம்‌. இடத்தை பெற்றார்‌. இளங்கலை வணிகவியல்‌ துறையைச்‌ சார்ந்த J.ஜீல்பியா பாத்திமா ஏழாம்‌ இடத்தை பெற்றார்‌. இளங்கலை கணிணிஅறிவியல்‌ துறையைச்‌ சார்ந்த D.தேவிபிரியா ஏழாம்‌ இடத்தை பெற்றார்‌.
முதுநிலை வணிகவியல்‌ கணிணிப்‌ பயன்பாட்டியல்‌ துறையைச்‌ சார்ந்த G.கீமா என்ற மாணவி எட்டாம்‌ இடத்தையும்‌, முதுநிலை இயற்பியல்‌ துறையைச்‌ சார்ந்த அஞ்சலி சுரேஷ்குமார என்ற மாணவி ஒன்பதாம்‌ இடத்தையும்‌ பெற்றனர். ‌ மேற்படி நிகழ்வுகளை ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின்‌ செயலர்‌ ச.நந்தகுமார்‌ பிரதீப்‌ நிகழ்ச்சி நிரலை தொகுத்து வழங்கினார்‌. நந்தா கல்வி நிறுவனங்களின்‌ செயலர்‌ ச.திருமூத்தி, நந்தா கல்வி நிறுவனங்களின்‌ முதன்மை கல்வி அதிகாரி முனைவர்‌.ச.ஆறுமுகம்‌, நந்தா கல்வி நிறுவனங்களின்‌ ஆலோசகா்‌ முனைவர்‌.செ.ப.விஸ்வநாதன்‌, ஆகியோர்‌ முன்னிலை வகித்தனர்‌. இவ்விழா ஏற்பாடுகளை நந்தா கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரியின்‌ நிர்வாக அலுவலர் முனைவா்‌.வெ.ச.சீனிவாசன்‌, துறைத்தலைவர்கள்‌ மற்றும்‌ பேராசிரியர்கள்‌ சிறப்பாக செய்திருந்தனர்‌. இறுதியில் நாட்டுப்பண்ணுடன்‌ பட்டமளிப்பு விழா இனிதே நிறைவுபெற்றது.

Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.